நான் ஃபார்ம் அவுட்டாகல.. 3வது டி20யில் இந்தியா ஜெய்க்க இதான் காரணம்.. கேப்டன் சூரியகுமார் பேட்டி

Suryakumar Yadav 2
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதிய 3வது டி20 போட்டி தரம்சாலாவில் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் ஐடன் மார்க்ரம் 61 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

அடுத்து விளையாடிய இந்திய அணி 15.5 ஓவரில் 120/3 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 35 (18), திலக் வர்மா 25* (34) ரன்கள் எடுத்தனர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துணை கேப்டன் சுப்மன் கில் 28 (28), கேப்டன் சூரியகுமார் யாதவ் 12 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.

- Advertisement -

இந்தியா வெற்றி:

கடைசியில் சிவம் துபே 10* (4) அடித்து போட்டியை ஃபினிஷிங் செய்தார். அதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த போட்டியில் சந்தித்த தோல்வியில் பாடத்தைக் கற்றுக்கொண்டு இப்போட்டியில் விளையாடியதே இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டதாக கேப்டன் சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

பேட்டிங்கில் தாம் ஃபார்ம் அவுட்டாகவில்லை என்று தெரிவிக்கும் அவர் விரைவில் ரன்கள் அடிப்பேன் என்றும் நம்பிக்கை கூறியுள்ளார். இது பற்றி சூரியகுமார் பேசியது பின்வருமாறு. “உங்களுக்கு விளையாட்டு நிறைய கற்றுக்கொடுக்கிறது என்று நினைக்கிறேன். நீங்கள் இத்தொடரில் எப்படி கம்பேக் கொடுக்கிறீர்கள் என்பது முக்கியம். நாங்கள் மீண்டும் அடிப்படைக்குச் சென்று கட்டாக் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் செய்த அதே விஷயங்களை தான் இப்போட்டியிலும் மீண்டும் செய்தோம்”

- Advertisement -

ஃபார்ம் அவுட்டாகல:

“இன்று எங்களுக்கு சாதகமாக முடிவு வந்துள்ளது. சண்டிகரில் நடைபெற்ற கடந்த போட்டியில் எங்களுக்கு நிறைய பாடங்கள் கிடைத்தது. எங்களுடைய பவுலர்கள் உட்கார்ந்து பேசினார்கள். நாங்கள் நல்ல மீட்டிங்கை போட்டோம். கட்டாக் போட்டியில் செய்த அதே விஷயங்களை இங்கேயும் நாங்கள் வலைப்பயிற்சியில் செய்து வந்தோம். நாங்கள் அடிப்படைக்கு மீண்டும் செல்ல விரும்பினோம்”

இதையும் படிங்க: 10 வருடம் கழித்து தரம்சாலாவில் தெ.ஆ’வை சாய்த்த இந்தியா.. அபிஷேக் மிரட்டல்.. கில், சூரியகுமார் தடுமாற்றம்

“அதிகப்படியான விஷயங்களை முயற்சிக்காமல் அடிப்படையில் விளையாடுவது முக்கியம். வலைப்பயிற்சியில் நான் மிகவும் அழகாக பேட்டிங் செய்கிறேன். அனைத்தையும் எனது கட்டுப்பாட்டில் வைக்க முயற்சிக்கிறேன். எனவே ரன்கள் வரும் போது கண்டிப்பாக வரும். ஆம் நானும் ரன்கள் அடிக்கப் பார்க்கிறேன். நான் ஃபார்ம் அவுட்டாகவில்லை. ஆனால் ரன்கள் அவுட்டாகியுள்ளேன். இருப்பினும் இந்த வெற்றியை நாங்கள் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்கிறோம். நாளை லக்னோவுக்கு செல்லும் நாங்கள் அங்கிருந்து அடுத்த போட்டியைப் பற்றி பேச உள்ளோம்” என்று கூறினார்.

Advertisement