மெகா ஏலத்திற்கு முன் சி.எஸ்.கே அணி தக்கவைக்கும் முதல் நபர் இவர்தான் – சி.எஸ்.கே அதிகாரபூர்வ அறிவிப்பு

CSK-2
- Advertisement -

துபாய் சர்வதேச மைதானத்தில் அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறிய சென்னை அணியானது இம்முறை மீண்டு வந்து தோனியின் தலைமையில் கோப்பையை கைப்பற்றியது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி தோனியின் கேப்டன்சி தற்போது உச்சபட்ச பாராட்டை பெற்று வருகிறது.

Dhoni-3

- Advertisement -

இந்நிலையில் தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா ? என்ற கேள்வியும் எழுந்தது. ஏனெனில் தற்போது 40 வயதாகும் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022-ல் 41 வயதை எட்டி விடுவார் இதன் காரணமாக அவர் விளையாடுவாரா ? என்ற சந்தேகம் அனைவரது மத்தியிலும் இருந்தது. இதற்கு இந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்த கடைசி போட்டியின் போது தனது எதிர்காலம் குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி : என்னுடைய முடிவு அனைத்தும் பிசிசிஐ-யின் முடிவில்தான் உள்ளது. ஏனெனில் அடுத்த ஆண்டு 10 அணிகள் பங்கேற்க உள்ளதால் சிஎஸ்கே அணியின் நலனுக்கு எது அவசியமோ அதைத்தான் முடிவு செய்வோம் என்று தோனி கூறியிருந்தார்.

இதன் காரணமாக தோனி விளையாடுவாரா ? விளையாட மாட்டாரா ? என்ற குழப்பத்தில் இருந்த போது இறுதியில் தான் இன்னும் சென்னையில் இருந்து விலகவில்லை என்றும் சென்னை அணியில்தான் இருக்கிறேன் என்றும் அவர் கூறி உள்ளதால் நிச்சயம் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரோடு அவர் ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது. இப்படி தோனியின் எதிர்கால கிரிக்கெட் பற்றி ஒரு உறுதியான மற்றும் பிடிப்பான தகவல் எதுவும் இல்லாத நிலையில் தற்போது தோனி அடுத்தாண்டு விளையாடுவதை அதிகாரபூர்வமாக சிஎஸ்கே அணியின் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

dhoni 2

அதன்படி சிஎஸ்கே அணியின் முக்கிய நிர்வாகி ஒருவர் வெளியிட்டுள்ள கருத்தில் : அடுத்த ஆண்டு எத்தனை அணிகள் வந்தாலும் சரி, எத்தனை வீரர்களை அணியில் தக்க வைப்பது என்பது குறித்து முடிவு எடுத்தாலும் சரி எங்களது முதல் ரீடெய்ன் கார்டை நாங்கள் முதல் நபராக தோனிக்காகவே பயன்படுத்த உள்ளோம் என்று அவர் உறுதி செய்துள்ளார்.

- Advertisement -

dhoni

மேலும் சி.எஸ்.கே என்கிற கப்பலை வழிநடத்த தோனி என்ற ஒரு கப்பலின் கேப்டன் தேவை அதன்படி எங்கள் அணிக்கு தோனி கேப்டனாக இருக்க வேண்டியது நிச்சயம் அவசியம். எனவே நாங்கள் முதல் நபராக தக்கவைக்கும் வீரர் என்றால் அது தோனிதான். எத்தனை வீரர்களை தக்கவைக்க முடியும் என்பது தெரியவில்லை இருப்பினும் நாங்கள் தக்கவைக்க நினைக்கும் முதல் வீரர் தோனி தான் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : டி20 உ.கோ : தோனி எங்களுடன் இருக்கப்போவது எப்படி இருக்கு தெரியுமா ? – கேப்டன் விராட் கோலி ஓபன்டாக்

அடுத்த 10 ஆண்டுகளுக்கான தரமான சென்னை அணி அமைய வேண்டுமெனில் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக தோனி விளையாடி வீரர்களை வைத்து நல்ல பிளாட்பார்ம் அமைத்து தர வேண்டியது அவசியம். எனவே அடுத்த மெகா ஏலத்திற்கு முன்னதாக முதல் நபராக தோனியே சிஎஸ்கே அணியால் அதிகாரபூர்வமாக தக்க வைக்கப்படுவார் என அவர் உறுதியாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement