டி20 உ.கோ : தோனி எங்களுடன் இருக்கப்போவது எப்படி இருக்கு தெரியுமா ? – கேப்டன் விராட் கோலி ஓபன்டாக்

Kohli
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் தற்போது வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் இன்று அக்டோபர் 17ஆம் தேதி முதல் டி20 உலகக்கோப்பை தொடரானது அங்கு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் அங்கு ஆயத்தமாக இருக்கும் வேளையில் இந்திய அணியும் இந்த உலகக் கோப்பையை கைப்பற்றியே ஆகவேண்டும் என்று உறுதியாக உள்ளது. ஏற்கனவே இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டபோது இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனி அணியுடன் இருப்பார் என்று பிசிசிஐ தரப்பில் செய்திகள் வெளியானது.

IND

அந்த செய்தி வெளியானதிலிருந்து ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏனெனில் தோனியின் அனுபவம் நிச்சயம் இந்திய அணிக்கு கைகொடுக்கும் என்பதனால் தோனியின் வருகை இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் என்றும் கூறியிருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த டி20 உலக கோப்பை தொடர் குறித்தும், தோனி அணியின் ஆலோசகராக செயல்பட இருப்பது குறித்தும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனி எவ்வளவு அனுபவம் வாய்ந்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நிச்சயம் அவருடைய அனுபவமும் அவருடைய சொற்களும் இந்திய அணிக்கு பலம் சேர்க்கும். நாங்கள் இளம் வீரராக அணியில் இருந்த போதே தோனி கேப்டனாக மட்டுமில்லாமல் எங்களுக்கு ஒரு மென்டராகவே இருந்துள்ளார். இப்பொழுது இந்திய அணியில் விளையாடி வரும் சீனியர் வீரர்கள் பலர் தோனியின் தலைமையில் அறிமுகமானவர்கள்.

dhoni

எனவே நிச்சயம் அணியில் உள்ள வீரர்கள் அனைவரைப் பற்றியும் தோனி அறிந்து வைத்திருப்பார். அவருடைய அனுபவம் நிச்சயம் எங்கள் அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி தோனி எங்களுடன் இருப்பது தனிப்பட்ட எங்களுடைய நம்பிக்கையையும் அதிகரிக்கிறது. குறிப்பாக இளம் வீரர்கள் தற்போது முதல் முறையாக பெரிய தொடரில் விளையாட இருக்கும்போது இவரைப்போன்ற ஒரு பெரிய ஜாம்பவான் அணியின் ஆலோசகராக இருப்பது அவர்களுக்கு நிச்சயம் உதவும்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியின் வெற்றி கொண்டாட்டம் எப்போது ? எப்படி நடக்கும் – காசி விஸ்வநாதன் விளக்கம்

என்னை பொருத்தவரை இந்த தொடரில் இந்திய அணி தங்களது 100 சதவீத ஈடுபாட்டையும் கொடுக்கும் என்று கோலி கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : தோனி எங்களுடன் இருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் அவரது இருப்பு எங்கள் அணிக்கு இன்னும் ஊக்கமளிக்கிறது. எங்களுடைய நம்பிக்கையையும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. நிச்சயம் இந்த தொடரில் அவருடைய அனுபவமும், அவருடைய அறிவுரைகளும் எங்களுக்கு உதவும் என கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement