சி.எஸ்.கே அணியின் வெற்றி கொண்டாட்டம் எப்போது ? எப்படி நடக்கும் – காசி விஸ்வநாதன் விளக்கம்

kasi
- Advertisement -

துபாயில் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 27 வித்தியாசத்தில் வெற்றி பெற்று சிஎஸ்கே அணியானது 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. தோனி தலைமையிலான சென்னை அணி கடந்த ஆண்டு மோசமான சீசனை சந்தித்திருந்தாலும் இந்த ஆண்டு மீண்டுவந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று தோனி கூறியதற்கு ஏற்ப இம்முறை கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்த தொடரில் வெற்றிபெற்ற சிஎஸ்கே அணிக்கு 20 கோடியும், இரண்டாம் இடம் பிடித்த கொல்கத்தா அணிக்கு 12.50 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. இந்நிலையில் வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் தோனி கூறுகையில் : அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் நான் விளையாடுவது பிசிசிஐ எடுக்கும் முடிவில் தான் இருக்கிறது என்றும் சென்னை அணிக்கு எது நல்ல முடிவாக இருக்குமோ அதையே நாங்கள் செய்வோம் என்றும் தோனி கூறியிருந்தார்.

இருப்பினும் தற்போது வரை தான் சென்னை அணியில் தான் நீடிக்கிறேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை அணி பெற்ற இந்த வெற்றிக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில் சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் சார்பாக எப்போது கொண்டாட்டம் நடைபெறும் ? என்பது குறித்த முக்கிய தகவலை சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

csk 1

இதுகுறித்து அவர் கூறுகையில் : சென்னை அணியின் கேப்டன் தோனி தற்போது இந்திய அணியுடன் டி20 உலக கோப்பை தொடருக்கான ஆலோசகராக பயணிக்க உள்ளார். அவரது இந்த பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அவர் இல்லாமல் வெற்றிக்கொண்டாட்டம் கிடையாது.

- Advertisement -

இதையும் படிங்க : சி.எஸ்.கே மாதிரி சிறப்பான டீம் அமைய நீங்க இருவர் தான் காரணம் – டூபிளெஸ்ஸிஸ் புகழாரம்

எனவே உலக கோப்பை தொடர் முடிந்து இந்திய அணி நாடு திரும்பிய பிறகு சிறிய அளவிலான கொண்டாட்டத்திற்காக ஏற்பாடு செய்வோம். மேலும் தோனி நிச்சயம் அதில் கலந்து கொள்வார் அவரது வருகைக்காக மிகவும் மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறோம் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement