சி.எஸ்.கே மாதிரி சிறப்பான டீம் அமைய நீங்க இருவர் தான் காரணம் – டூபிளெஸ்ஸிஸ் புகழாரம்

Faf du plessis
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 14-வது ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. முக்கியமான இந்த இறுதிப் போட்டியில் சென்னை அணியின் துவக்க வீரரான டூபிளெஸ்ஸிஸ் 86 ரன்கள் குவித்து சென்னை அணியை பெரிய ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றார். இவரது இந்த சிறப்பான பேட்டிங் வெற்றிக்கு உதவியது என்றால் அது மிகையல்ல.

faf 1

மேலும் இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடிய சென்னை அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் 635 ரன்களையும், டூபிளெஸ்ஸிஸ் 633 ரன்களையும் குவித்து இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாட காரணம் என்ன ? என்பது குறித்து தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து வெளியாகியுள்ள வீடியோவில் அவர் கூறியதாவது :

- Advertisement -

என்னுடன் விளையாடிய சக வீரரான ருதுராஜ் மிகவும் சிறப்பான ஒரு வீரர், அவர் ஒரு சாம்பியன். அவரது திறன் என்பது மிகவும் அபாரமானது. ஒருபுறம் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபுறம் என்னுடைய ரோலை நான் அழுத்தமின்றி செய்யமுடிந்தது. அவருக்கும் இதன் மூலம் நல்ல அனுபவம் கிடைத்திருக்கும். இந்த சீசன் எங்களுக்கு மிகவும் முக்கியமான சீசன் சென்னை அணியுடன் நான் செலவிட்ட நேரம் என்பது மிகவும் பொன்னானது.

faf

இந்த சீசன் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை கொண்டுவரவும் உதவியது. அதோடு அணியில் உள்ள சக வீரர்களும் நிர்வாகிகளும் முன்னின்று எங்களுக்கு ஆதரவு அளித்தது அற்புதம். அனைத்து வீரர்களும் தங்களது செயல் திறனை சிறப்பாக வெளிப்படுத்தினர். இப்படி ஒரு சிறப்பான டீமை அமைத்த பெருமை சிஎஸ்கே அணியின் பயிற்சியாளரான பிளமிங் மற்றும் கேப்டன் தோனி ஆகியோரை மட்டுமே சாரும் என அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் ரசல் ஏன் விளையாடவில்லை – மெக்கல்லம் கொடுத்த விளக்கம்

ஏற்கனவே கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய சென்னை அணியானது இனி எழுச்சி பெறாது என்று அனைவரும் கூறிய வேளையில் மீண்டும் வந்து இந்த ஆண்டு மீண்டும் சாம்பியன் ஆனது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement