
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 25ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 43வது போட்டி நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் திணறும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. அந்த 2 அணிகளுமே இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6 தோல்விகளை சந்தித்துள்ளதால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல எஞ்சிய 6 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அதனால் அந்தப் போட்டியில் வெற்றியைப் பெற இரு அணிகளும் போராடும் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அவ்விரு அணிகளில் ஹைதெராபாத் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி பெரிய ரன்கள்க் குவிக்கும் தன்மையை கொண்டுள்ளது. இருப்பினும் தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடத் தவறுவது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக இருந்து வருகிறது.
மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆரம்பம் முதலே பேட்டிங்கில் திண்டாட்டமாக விளையாடுகிறது. அதனால் இந்தப் போட்டியில் சென்னை வெல்லுமா? என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஹைதராபாத்துக்கு எதிரான அந்தப் போட்டியில் சென்னை வெல்லும் என்று தாம் நம்புவதாக இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார்.
ஏனெனில் தொடர் தோல்விகளால் சாய்க் ரசீத், ஆயுஷ் மாத்ரே போன்ற இளம் வீரர்களின் பக்கம் சென்னை திரும்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார். அது போக சேப்பாக்கத்தில் ஹைதராபாத்தை விட சென்னை ஜடேஜா, நூர் அஹ்மத் போன்ற தரமான ஸ்பின்னர்களை கொண்டுள்ளதாக சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். மறுபுறம் ஹைதராபாத் பேட்டிங்கில் தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடத் தடுமாறுவதாக அவர் கூறியுள்ளார்.
எனவே தோனி தலைமையில் தங்களுடைய சுழல் பலத்தை வைத்து சென்னை வெல்லும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஜியோஸ்டார் சேனலில் பேசியது பின்வருமாறு. “ஹைதெராபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கே வெல்லும் என்று நான் நம்புகிறேன். சிஎஸ்கே அணியின் சுழல் பலம் தோனி தலைமையில் விளையாடுவது வெற்றிக்கான சாவியாக இருக்கும்”
இதையும் படிங்க: விராட் கோலி மாதிரி வைபவ் சூர்யவன்ஷியும் 20 வருஷம் இதை பண்ணனும்.. அதுதான் என்னோட ஆசை – சேவாக் கருத்து
“சேப்பாக்கத்தில் அவர்கள் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு உதவி இருப்பதை உறுதி செய்வார்கள். அது போக சென்னை அணி முந்தைய தோல்விகளால் முன்னோக்கி வளர்ச்சியடைந்து இளைஞர்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. மறுபுறம் ஹைதராபாத் சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது” என்று கூறினார். மொத்தத்தில் இந்தப் போட்டியில் தோற்கும் அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை 99% இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.