CSK vs SRH : இப்படி ஒரு மோசமான தோல்வியை நாங்க சந்திக்க இதுவே காரணம் – எய்டன் மார்க்ரம் வருத்தம்

Markram
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரின் 29-வது லீக் ஆட்டமானது நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

CSK vs SRH

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே குவித்தது. சென்னை அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா நான்கு ஓவர்களை முழுவதுமாக வீசி 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசித்தினார்.

பின்னர் 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 18.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 138 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறுகையில் :

Moeen Ali

இந்த தோல்வி அடைந்தது மீண்டும் வருத்தம் அளிக்கிறது. ஏனெனில் எப்போதுமே ஒரு போட்டியில் தோல்வியை சந்திப்பது என்பது நல்ல உணர்வை தராது. இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங்கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விட்டோம். எந்த ஒரு கட்டத்திலும் எங்களால் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைக்க முடியவில்லை.

- Advertisement -

இப்படி பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் போனால் பெரிய ரன் குவிப்பிற்கு நாம் செல்ல முடியாது. இந்த மைதானத்தில் 130 ரன்கள் என்பது வெற்றிக்கு போதுமான ரன்கள் கிடையாது. 160 ரன்களுக்கு மேல் நாங்கள் ரன்களை குவித்திருக்க வேண்டும். ஆனாலும் சிஎஸ்கே அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி எங்களது அணியின் எந்த ஒரு பேட்ஸ்மேனையும் பெரிய ரன் குவிப்பிற்கு செல்ல விடாமல் தடுத்து விட்டனர்.

இதையும் படிங்க : CSK vs SRH : நான் எனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன். எதிர்காலம் குறித்தும் ரசிகர்கள் குறித்தும் – தோனி ஓபன்டாக்

இந்த போட்டியில் எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் நாங்கள் பேட்டிங்கில் பெரிய ரன் குவிக்காததே தோல்விக்கு காரணம் என எய்டன் மார்க்ரம் வருத்தத்துடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement