CSK vs SRH : நான் எனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன். எதிர்காலம் குறித்தும் ரசிகர்கள் குறித்தும் – தோனி ஓபன்டாக்

MS Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் தொடர்ச்சியாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரின் இறுதியில் அடுத்த தொடரில் அவர் விளையாடுவாரா? அல்லது ஓய்வு பெறுவாரா? என்பதே பலரது கேள்வியாகவும் இருக்கும். அந்தவகையில் ஏற்கனவே கடந்த 2021 மற்றும் 2022-வது சீசனின் இறுதியில் : நான் ஓய்வு பெறப்போவதில்லை விளையாடுவேன் என்று தோனி அறிவித்தார்.

dhoni 1

- Advertisement -

ஆனாலும் தற்போது 41 வயதை எட்டியுள்ள மகேந்திர சிங் தோனிக்கு இதுவே கடைசி ஐபிஎல் தொடராக பார்க்கப்படுகிறது. மேலும் சிஎஸ்கே அணியும் அவருக்கு இந்த ஆண்டு பிரியாவிடை நிகழ்ச்சியையும் சென்னை மைதானத்தில் நடத்த ஏற்பாடுகளையும் செய்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாக்கின. அதுமட்டும் இன்றி தோனியும் சென்னை அணிக்கான அடுத்த தலைமுறை வீரர்கள் மற்றும் கேப்டன் தேடல் ஆகியவற்றை நிறைவு செய்து முடித்துள்ளார் என்றும் தெரிகிறது.

எனவே இந்த ஆண்டுடன் நிச்சயம் தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு முடிவை அறிவித்து வெளியேறுவார் என்று கருதப்படுகிறது. அதோடு சென்னை மைதானத்தில் சென்னை ரசிகர்களின் மத்தியில் விளையாடிவிட்டு தான் நான் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று ஏற்கனவே தோனி அறிவித்தபடி தற்போது இந்த ஆண்டு சென்னையில் போட்டிகள் நடைபெற்று வருவதால் கட்டாயம் சென்னையில் வைத்து தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MS Dhoni 1

இந்நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐ.பி.எல் தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பரிசளிப்பு விழாவின் போது தோனியிடம் வர்ணனையாளர் :

- Advertisement -

இங்கு விளையாடும் போது ரசிகர்கள் காண்பிக்கும் அன்பு உங்களை மேலும் விளையாட வைக்குமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தோனி கூறுகையில் : நான் என்னுடைய கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன். எனவே இப்போது மகிழ்ச்சியாக விளையாட வேண்டும் என்று மட்டும் தான் நினைக்கிறேன். எப்போது நான் சென்னைக்கு வந்தாலும் என்னுடைய ஃபீலிங் நன்றாகவே இருக்கும்.

இதையும் படிங்க : IPL 2023 : அடிக்காம வெறும் பெயரை வெச்சுகிட்டு எத்தனை நாள் ஓட்டுவிங்க – நட்சத்திர இளம் இந்திய வீரரை விளாசும் மைக்கேல் வாகன்

ஏனெனில் அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் எனக்கு ரசிகர்களிடமிருந்து அன்பும், ஆதரவும் எப்பொழுதுமே கிடைத்திருக்கிறது. எப்போதுமே நான் சொல்வதை அவர்கள் கவனித்து கேட்கிறார்கள் என்று தோனி கூறினார். இதன் மூலம் நிச்சயம் தோனி இந்த ஆண்டு ஓய்வு பெறுவார் என்றும் ஆனாலும் தொடர்ந்து ஏதாவது ஒரு பொறுப்பில் சிஎஸ்கே அணியுடன் பயணிப்பார் என்பதும் அவரது இந்த பேட்டியின் மூலம் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement