CSK vs GT : இன்றைய ஃபைனலில் தல தோனி படைக்க உள்ள சரித்திர ஐபிஎல் சாதனை – கோப்பையுடன் விடை பெறுவாரா?

Dhoni-3 IPL
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பரபரப்பான போட்டிகளுடன் மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டி மே 28ஆம் தேதியான இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் கோப்பைக்காக மோதுகின்றன. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் தங்களது கோட்டையான அகமதாபாத் மைதானத்தில் சொந்த மண்ணில் விளையாடுவதால் கோப்பையை தக்க வைக்கும் என்று அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

CSK-vs-GT-1

- Advertisement -

குறிப்பாக அந்த அணியில் பேட்டிங்கில் சுப்மன் கில் உச்சகட்ட பார்மில் இருக்கும் நிலையில் கேப்டன் பாண்டியா, மில்லர், திவாட்டியா, ரசித் கான் போன்றவர்கள் வலு சேர்க்கின்றனர். அதே போல் பந்து வீச்சில் ஷமி, மோஹித் சர்மா ஆகியோர் ஊதா தொப்பி பட்டியலில் டாப் இடங்களை பிடித்து சிறப்பான ஃபார்மில் இருப்பது சென்னை அணிக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. மறுபுறம் 14 சீசன்களில் 12 முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று 10 முறை இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்ற முதல் அணியாக சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான அணியாக திகழ்கிறது.

வெற்றியுடன் விடைபெறுவாரா:
மேலும் கடந்த சீசனில் புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்தாலும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை மகத்தான கேப்டன் எம்எஸ் தோனி தலைமையில் தொடர்ந்து அசத்தி வரும் சென்னை இம்முறையும் அனுபவமற்ற பவுலர்களை வைத்துக் கொண்டே ஃபைனலுக்கு முன்னேறி கம்பேக் கொடுத்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே 9 ஃபைனல்களில் விளையாடிய அனுபவம் கொண்ட சென்னை இம்முறை குஜராத்தை தோற்கடித்து 5வது கோப்பையை வென்று பரம எதிரியான மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் காணப்படுகிறது.

அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மாபெரும் இறுதிப் போட்டியில் களமிறங்கும் எம்எஸ் தோனி ஐபிஎல் வரலாற்றில் 250 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சரித்திரத்தை படைக்க உள்ளார். குறிப்பாக சென்னை மற்றும் புனே அணிக்காக சேர்த்து 250 போட்டிகளில் விளையாடி சாதனை படைக்கும் அவருக்கு அடுத்தபடியாக அதிக ஐபிஎல் போட்டிகளில் (243) விளையாடிய வீரராக ரோஹித் சர்மா உள்ளார். அவர்களுக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் (242), விராட் கோலி (237), ரவீந்திர ஜடேஜா (225) ஆகியோர் உள்ளனர்.

- Advertisement -

கடந்த 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்ட போது மும்பைக்கு சச்சின், கொல்கத்தாவுக்கு கங்குலி என்ற அந்தந்த மாநில ஜாம்பவான்கள் தலைமை தாங்கிய போது தமிழகத்தில் அதுபோன்ற வீரர் இல்லாததால் இந்தியாவுக்கு 2007 டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த ஜார்க்கண்ட்டை சேர்ந்த தோனி சென்னை அணிக்காக பெரிய தொகைக்கு வாங்கப்பட்டு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அப்போது முதல் மிகச் சிறந்த கேப்டனாகவும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் அதிரடி பினிஷராகவும் பல வகைகளில் வெற்றிகளில் பங்காற்றி வரும் அவரை தமிழக ரசிகர்கள் தல என்று கொண்டாடுகின்றனர்.

அப்படி சென்னையின் ரத்தமும் சதையும் கலந்த இதயமாக கருதப்படும் அவர் விரைவில் 42 வயதை தொடுவதால் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 2020இல் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்ட அவர் வயது காரணமாக தற்போது முழங்கால் வலியால் வேகமாக ஓடி டபுள் ரன்களை எடுக்க முடியாமல் தடுமாறி வருவதால் 8வது இடத்தில் விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க:IPL 2023 : இறுதிப்போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டால் யாருக்கு சாம்பியன் பட்டம்? – ரூல்ஸ் சொல்வது என்ன?

அந்த சூழ்நிலையில் நான் ஓய்வு பெறுவதை நீங்களே முடிவு செய்தால் எப்படி, அது பற்றி முடிவெடுக்க இன்னும் 8 – 9 மாதங்கள் இருக்கிறது என்று சமீபத்தில் தெரிவித்த தோனி அடுத்த வருடம் விளையாடுவாரா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஆச்சரியப்படும் முடிவுகளை எடுப்பதுடன் வழியனுப்பும் போட்டிகளை விரும்பாத அவர் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் 5வது கோப்பையை வென்று வெற்றியுடன் விடை பெற வேண்டும் என்பதே சென்னை ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

Advertisement