IPL 2023 : இறுதிப்போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டால் யாருக்கு சாம்பியன் பட்டம்? – ரூல்ஸ் சொல்வது என்ன?

CSK-vs-GT-1
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவினை பெற்று கோலாகலமாக நடைபெற்று வந்த நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இன்று நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியுடன் நிறைவடைய உள்ளது. கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி துவங்கிய இந்த ஐ.பி.எல் தொடரானது கிட்டத்தட்ட 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்வித்து வந்த வேளையில் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் குறைவில்லாமல் நடைபெற்று வந்த ஐ.பி.எல் தொடரானது நிறைவடையப்போவது சற்று வருத்தத்தையும் தந்துள்ளது.

CSK vs GT

- Advertisement -

இந்த தொடரின் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த இறுதிப்போட்டியானது மழையால் பாதிக்கப்பட்டால் என்ன ஆகும்? என்பது குறித்த தெளிவான தகவலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி இன்றைய இறுதிப்போட்டி மழையால் முழுவதுமாக பாதிக்கப்பட்டால் எந்தவொரு கவலையும் நமக்கு இருக்காது.

Motera

ஏனெனில் ஐ.பி.எல் விதிப்படி இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் இறுதிப்போட்டிக்கு அடுத்தநாள் “ரிசர்வ் டே” வாக அறிவிக்கப்பட்டு அந்த நாளில் மீண்டும் இறுதிப்போட்டியானது நடைபெறும். அதாவது மே 28 ஆம் தேதி இன்று மழையால் இறுதிப்போட்டி பாதிக்கப்பட்டால் நாளை மே 29-ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும்.

- Advertisement -

ஒருவேளை மழையாலோ (அ) மோசமான சூழலாலோ நாளையும் (மே 29) இறுதிப்போட்டி நடைபெறாமல் போகும் பட்சத்தில் லீக் போட்டிகளின் அடிப்படையில் அதிக வெற்றிகளை பெற்ற அணியான குஜராத் அணியே சாம்பியனாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IPL 2023 : விராட், ரோஹித்தை டீமை ஓடவிட்ட மாதிரி தோனியையும் – சுப்மன் கில் தெறிக்க விடுவாரு, சிஎஸ்கே’வை எச்சரித்த முன்னாள் வீரர்

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது குவாலிபயர் போட்டி மழையால் தாமதமாக துவங்கினாலும் முழுவதுமாக நடைபெற்று முடிந்தது. ஆனால் இன்று அங்கு வானிலை நன்றாக இருப்பதனால் இந்த இறுதிப்போட்டி எந்தவொரு தடையும் இன்றி முழுவதுமாக நடைபெறும் என நம்பலாம்.

Advertisement