விராட் கோலியின் 71-வது சதத்தை பாராட்டி சி.எஸ்.கே நிர்வாகம் போட்ட பதிவு – இணையத்தில் படுவைரல்

Virat Kohli
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின் “சூப்பர் 4” சுற்றில் இரண்டு தோல்விகளை அடுத்தடுத்து சந்தித்த இந்திய அணியானது இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. இரண்டு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தாலும் “சூப்பர் 4” சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி ஆறுதல் வெற்றியை பெற்றது. இந்த தொடரில் வீரர்களின் செயல்பாடு எவ்வாறு அமைகிறதோ அதன்படியே உலகக்கோப்பை தொடருக்கான தேர்வும் அமையும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான கடைசி போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 71-வது சதத்தினை பதிவு செய்தார்.

- Advertisement -

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 70-வது சதத்தை பதிவு செய்த விராட் கோலி அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சதம் அடிக்காமல் தடுமாறி வந்தார். அதனால் அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்தன. இந்நிலையில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வந்த விராட் கோலி இந்த ஆசிய கோப்பை தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த ஆசியக்கோப்பை தொடரில் ஐந்து போட்டிகளில் இரண்டு அரை சதம் மற்றும் ஒரு சதம் உட்பட 276 ரன்கள் குவித்து அசத்தினார். அதிலும் குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 61 பந்துகளை சந்தித்த அவர் 6 சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரி என 122 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

கோலியின் சதத்தை உலகமே கொண்டாடிய வேளையில் சிஎஸ்கே அணியின் நிர்வாகமும் அவரை கொண்டாடியுள்ளது. இது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில் : போர்க்கண்ட சிங்கம் என்ற தலைப்பில் விராட் கோலியின் புகைப்படத்தை பகிர்ந்த அவர்கள் குறிப்பிட்டதாவது :

இதையும் படிங்க : ஆசிய கோப்பை தோல்வி எதிரொலி : இந்திய டி20 அணியில் கம்பேக் கொடுக்க வாய்ப்புள்ள 4 வீரர்களின் பட்டியல்

விராட் கோலி ராஜா திரும்பி வந்துவிட்டார் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் அவர் ஒருபோதும் பார்மை விட்டு வெளியேறவில்லை. இல்லையா? என்று அவர்கள் போட்டுள்ள டிவீட் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement