ஆசிய கோப்பை தோல்வி எதிரொலி : இந்திய டி20 அணியில் கம்பேக் கொடுக்க வாய்ப்புள்ள 4 வீரர்களின் பட்டியல்

IND
Advertisement

2022 ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா உலகின் நம்பர் ஒன் டி20 அணியாகவும் எதிரணிகளை காட்டிலும் உலகத் தரமான வீரர்களை கொண்டிருந்த போதிலும் தவறான அணி தேர்வு, சுமாரான கேப்டன்ஷிப் போன்ற குளறுபடிகளால் பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது. விரைவில் நடைபெறும் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் போட்டிகளாக நடைபெற்ற இந்த தொடரிலேயே தோற்ற இந்தியா ஆஸ்திரேலியாவில் எங்கே உலகக்கோப்பையை வெல்லப் போகிறது என்ற ரசிகர்களிடம் கவலை ஏற்பட்டுள்ளது.

Avesh-Khan

முன்னதாக இந்த தொடரில் கேஎல் ராகுல் போன்ற நட்சத்திர வீரர்கள் முக்கிய நேரங்களில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. வழக்கமாகவே இது போன்ற முக்கிய தொடர்களில் தோல்விகள் நிகழும் போது அதிரடியான வீரர்களை நீக்குவது போன்ற அதிரடியான மாற்றங்கள் நிகழ்வதும் வழக்கமாகும். அந்த வகையில் இந்த ஆசிய கோப்பையில் தோற்றதால் விரைவில் இந்திய டி20 அணியில் கம்பேக் கொடுக்க வாய்ப்புள்ள சில வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

4. இஷான் கிசான்: இந்த தொடரில் தொடக்க வீரரான கேஎல் ராகுல் மொத்தமாக சொதப்பியது அனைவரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொதுவாக இடது – வலது ஓப்பனிங் ஜோடி சிறப்பானது என்ற நிலைமையில் ஏற்கனவே ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இருப்பதால் இவரையும் சேர்த்து டாப் 3 பேட்ஸ்மேன்களும் வலதுகை வீரர்களாக உள்ளனர். அதனால் முக்கிய தருணங்களில் இந்த மூவரையுமே இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் எளிதாக சாய்த்து கதையை முடித்து விடுகிறார்கள்.

ishan kishan 2

எனவே நல்ல இளம் தொடக்க வீரரான இவரை உலகக் கோப்பையில் குறைந்தபட்சம் பேக்-அப் தொடக்க வீரராக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்ல விரைவில் சொந்த மண்ணில் நடைபெறும் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க தொடரில் முன்கூட்டியே வாய்ப்புகள் கொடுக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் சமீபத்தில் தொடக்க வீரராக சோதித்துப் பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் வழக்கம் போல சொதப்பினார். ஐபிஎல் 2022 தொடரில் அதிகப்படியான விலையால் அழுத்தத்தில் தடுமாறிய இவர் அதிலிருந்து வெளியே வந்ததும் நடந்த தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேனாக அசத்தியிருந்தார்.

- Advertisement -

3. சஞ்சு சாம்சன்: காலம் காலமாக தொடர்ச்சியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வரும் இவர் இந்த வருடம் ஓரளவு நல்ல வாய்ப்புகளைப் பெற்று 179 ரன்களை 44.75 என்ற நல்ல சராசரியில் 158.41 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி நல்ல பார்மில் இருக்கிறார். இருப்பினும் முக்கிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டதால் ஆசிய கோப்பையில் கழற்றிவிடப்பட்ட இவர் ரிஷப் பண்ட் சொதப்பியதால் விரைவில் நடைபெறும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்களில் மீண்டும் கம்பேக் கொடுக்க வாய்ப்புள்ளது.

Sanju Samson

ஏற்கனவே ஒட்டுமொத்த ரசிகர்களும் நிறைய முன்னாள் வீரர்களும் இவருக்கு ஆதரவாக இருப்பதால் டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெறாவிட்டாலும் விரைவில் டி20 அணியில் இவர் விளையாடுவதை நம்மால் நிச்சயம் பார்க்க முடியும்.

- Advertisement -

2. உம்ரான் மாலிக்: இந்த பெயர் இந்தப் பட்டியலில் இருக்கிறதே என்று கோபப்பட வேண்டாம். ஏனெனில் ஐபிஎல் 2022 தொடரில் ரன்களை வழங்கினாலும் அதிரடியான வேகத்தில் பந்து வீசி விக்கெட்டுகளை அள்ளி இந்தியாவுக்காக அறிமுகமாகி 2 போட்டிகளில் விளையாடி 12.44 என்ற மோசமான எக்கனாமியில் பந்து வீசியது உண்மையே. ஆனால் எந்த ஒரு வீரரையும் வெறும் 2 போட்டியில் வைத்து மதிப்பிட முடியாது.

IND vs IRE Umran Malik

எடுத்துக்காட்டாக ரோஹித் சர்மா போன்றவர்கள் 100 போட்டிகளுக்கு பின்புதான் ஜொலிக்க தொடங்கினார். மேலும் இந்த ஆசிய கோப்பையில் விளையாடிய ஆவேஷ் கான் சுமாராக செயல்பட்டதால் அவருக்கு இவர் பரவாயில்லை என்று கருதி தேர்வுக்குழு மீண்டும் வாய்ப்பு கொடுக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் எவ்வளவு பயிற்சிகள் கொடுத்தாலும் கிடைக்காத எக்ஸ்பிரஸ் வேகம் உள்ள இவருக்கு ரன்களை கட்டுப்படுத்துவதற்கான பயிற்சியை சரியாக கொடுத்தால் மிகச்சிறந்த பவுலராக உருவெடுப்பார்.

- Advertisement -

அத்துடன் இந்த ஆசிய கோப்பையில் சீனியரான புவனேஸ்வர் குமார் அடுத்தடுத்த 19 ஓவரை கட்டுப்படுத்த முடியாத நிலைமையில் அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் கடைசி ஓவரில் 17 ரன்களை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய இவர் வெற்றி பெற வைத்ததை மறந்து விடக்கூடாது.

Shami

1. முகமது ஷமி: 30 வயதை தாண்டி விட்டார் என்ற ஒரே காரணத்திற்காக இந்த ஆசிய கோப்பை மட்டுமல்லாது எப்போதுமே இந்திய டி20 அணியில் தேர்வு செய்யப்பட மாட்டார் என்று தேர்வுக்குழு மறைமுகமாக அறிவித்துள்ளது நிறைய முன்னாள் வீரர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ஏனெனில் தரமான வீரருக்கு வயது வெறும் நம்பர் என்ற நிலைமையில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் 20 விக்கெட்டுகளை எடுத்த இவர் குஜராத் சாம்பியன் பட்டம் வெல்ல பந்துவீச்சு துறையில் துருப்பு சீட்டாக செயல்பட்டார்.

இதையும் படிங்க : தன்னுடைய 15 பேர் கொண்ட டி20 உ.கோ அணியை வெளியிட்ட ஆஷிஷ் நெஹ்ரா – முக்கிய வீரருக்கு வாய்ப்பில்லை

மேலும் சரியான 3வது வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் இந்த ஆசிய கோப்பையில் இந்தியா தோற்றதால் ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் மீண்டும் இவரை தேர்வு செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்கள். எனவே அனுபவமும் திறமையும் உள்ள இவர் மீண்டும் டி20 அணியில் விளையாடுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

Advertisement