ஐ.பி.எல் 2022 : இந்தாண்டிற்கான புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய சென்னை நிர்வாகம் – எப்படி இருக்கு சொல்லுங்க

cskvsdc
cskvsdc
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மட்டுமின்றி இறுதிப் போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணியானது இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன்படி நடப்பு சாம்பியனாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்த ஆண்டின் முதல் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

இந்த பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான முதல் போட்டி வரும் சனிக்கிழமை துவங்க உள்ள நிலையில் தற்போது அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பெங்களூருவில் நடைபெற்று முடிந்த மெகா ஏலத்தில் இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் கலந்து கொண்டு தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை வாங்கியது.

- Advertisement -

அதனை தொடர்ந்து அனைத்து அணிகளும் தங்கள் அணியில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களை வைத்து தற்போது பலமான பிளேயிங் லெவனை கட்டமைத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை அணியும் தற்போது தங்களுக்கு தேவையான வீரர்களை வைத்து பிளேயிங் லெவன் காம்பினேஷனை தயார் செய்து விட்டது என்றே கூறலாம்.

இதற்கிடையில் அனைத்து அணிகளும் இந்த ஆண்டிற்கான தங்களது அணியின் ஜெர்சியை வெளியிட்ட வேளையில் தற்போது சென்னை அணியும் இந்த ஆண்டு தாங்கள் பயன்படுத்த இருக்கும் சீருடையை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

கடந்த ஆண்டு இருந்த அதே சீருடை போன்று இருந்தாலும் ஸ்பான்சர்கள் மற்றும் சில புதிய நிறுவனங்களின் பெயர்கள் ஆங்காங்கே மாற்றப்பட்டு இந்த புதிய சீருடையானது அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவாக வெளியிட்டு உள்ளது.

இதையும் படிங்க : சென்னை அணி விளையாட இருக்கும் முதல் போட்டியை தவறவிடும் நட்சத்திர வீரர் – அடப்பாவமே

அந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளன. மேலும் 40 வயதை கடந்த தோனி இந்த ஆண்டோ அல்லது அடுத்த ஆண்டோ ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சீசனானது அவருக்கு மிக முக்கிய சீசனாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement