சுரேஷ் ரெய்னாவுக்கு இடமில்லை. சென்னை அணி தக்கவைக்கும் 4 வீரர்கள் இவர்கள்தான் – வெளியான தகவல்

CSK

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி 4-வது முறையாக கைப்பற்றி அசத்தியது. இதனை அடுத்து ஆண்டு தோனி விளையாடுவாரா ? என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் பெரிய கேள்வியாக இருந்தது. இந்நிலையில் தோனி நிச்சயம் அடுத்த ஆண்டு முதல் நபராக அணியில் தக்க வைக்கப்படுவது மட்டுமின்றி கேப்டனாகவும் நீடிப்பார் என ஏற்கனவே சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்தது.

csk 1

அதனைத் தொடர்ந்து தற்போது இந்த மெகா ஏலத்திற்கு முன்னர் சிஎஸ்கே அணியால் தக்க வைக்கப்படும் நான்கு வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பே ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. அந்த வகையில் சி.எஸ்.கே அணியால் தக்க வைக்கப்படும் இருக்கும் நான்கு வீரர்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதன்படி கேப்டன் தோனி தவிர நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய இளம் துவக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்திய வீரர்களிலும், வெளிநாட்டு வீரர்களில் துவக்க வீரர் ஃபேப் டு பிளிசிஸ் ஆகியோரும் தக்க வைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

jadeja 1

இதன் காரணமாக தோனியுடன் சேர்ந்து இவர்கள் மூவரை அடிப்படையாகக் கொண்ட சிஎஸ்கே அணி புதிதாக கட்டமைக்கப்படும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்ட இரு அணிகள் இணைய உள்ளதால் அடுத்த மாதம் அணி வீரர்கள் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : மொதல்ல நல்லா சாப்பிட்டு வெயிட் ஏத்துங்க. அப்புறம் பாருங்க – இந்திய வீரருக்கு சல்மான் பட் அட்வைஸ்

ஏப்ரல் மாதம் துவங்கும் என்று கூறப்படும் அடுத்த ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியே சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement