மொதல்ல நல்லா சாப்பிட்டு வெயிட் ஏத்துங்க. அப்புறம் பாருங்க – இந்திய வீரருக்கு சல்மான் பட் அட்வைஸ்

Butt

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா இந்திய அணிக்காக கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகமாகி தற்போது வரை முக்கிய வீரராக விளையாடி வருகிறார். இதுவரை இந்திய அணிக்காக அவர் 54 டி20 போட்டிகள், 63 ஒருநாள் போட்டிகள் மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருடன் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Pandya-2

அதற்கு முக்கிய காரணம் என்னவெனில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட பாண்டியா தொடர்ந்து பந்துவீசாமல் முழுநேர பேட்ஸ்மேனாக மட்டுமே இந்திய அணியில் விளையாடி வந்தார். டி20 உலக கோப்பை தொடரில் நிச்சயம் அவர் பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் உலக கோப்பை தொடரிலும் அவர் வெறும் 4 ஓவர்களை மட்டுமே வீசினார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி முன்பு போன்று அவரிடம் பேட்டிங்கிலும் பெரிய அளவு தாக்கம் இல்லை என்று தெரியவர நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் இந்திய அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார். இந்நிலையில் பாண்டியா மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டுமெனில் கட்டாயம் அவர் தனது பவுலிங்கில் கவனம் செலுத்தியாக வேண்டும்.

pandya

அதுமட்டுமின்றி பேட்டிங்கிலும் அவரது ஆட்டத்தை முன்னேற்ற வேண்டிய அவசியம் உள்ளது. அப்படி செய்தால் மட்டுமே மீண்டும் அவர் இந்திய அணியில் இணைந்து நிலைத்திருக்க முடியும். இந்நிலையில் பாண்டியா தொடர்ந்து விளையாட வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் தனது கருத்தினை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இதையும் படிங்க : இந்த ஒரு விஷயத்தில் நாங்க எந்த ரூல்ஸ்ஸும் போடல. சொன்னா நம்புங்க – பி.சி.சி.ஐ விளக்கம்

பாண்டியா முதலில் கொஞ்சம் சதை போட வேண்டும். தற்போது அவர் சற்று மெலிதாகவே இருக்கிறார். நல்ல உணவுகளை எடுத்து இன்னும் அவர் சதை போட்டால் பலமாகவும், வலுவாகவும் மாறுவார். பின்பு கடினமான உடற்பயிற்சி மூலம் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்தால் நிச்சயம் அவரால் 3 வடிவ கிரிக்கெட்டிலும் நிலைத்து விளையாட முடியும் என்று சல்மான் பட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement