இந்த ஒரு விஷயத்தில் நாங்க எந்த ரூல்ஸ்ஸும் போடல. சொன்னா நம்புங்க – பி.சி.சி.ஐ விளக்கம்

IND

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது நாளை கான்பூர் மைதானத்தில் துவங்க உள்ள நிலையில் கடந்த சில தினங்களாகவே இந்திய அணியின் உணவு கட்டுப்பாடு குறித்து வெளியான செய்திகள் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏனெனில் இந்திய வீரர்கள் ஹலால் செய்யப்பட்ட இறைச்சிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்றும் மற்றபடி மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி போன்றவற்றை உட்கொள்ள கூடாது என்றும் பிசிசிஐ வீரர்களிடையே ஒரு கடுமையான கட்டுப்பாட்டை விதித்ததாக செய்திகள் வெளியானது.

IND

மேலும் பிசிசிஐ நிபந்தனைக்கு உட்பட்ட பிசிசிஐயின் பட்டியலுக்கு உட்பட்ட உணவுகளை மட்டுமே இந்திய வீரர்கள் உட்கொள்ள வேண்டும் என்றும் அதனை மீறி எந்த வகையான உணவுகளையும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் பிசிசிஐயின் இந்த கட்டுப்பாடுகள் இந்திய வீரர்களுக்கு எதிரானது என்று ரசிகர்களும் சமூகவலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை முன்வைத்து வந்தனர். மேலும் அணியின் நிர்வாகம் வீரர்களின் உணவு முறைகளில் இது போன்று தலையிடுவது தவறு என்றும் அவர்களது தனிப்பட்ட விஷயத்தில் எந்த ஒரு கட்டுப்பாடுகளையும் விதிக்க கூடாது என்றும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.

axar

இந்நிலையில் இந்த ஹலால் வகை உணவு விவகாரம் குறித்து பேசியுள்ள பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறுகையில் : இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வீரர்களுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிட கூடாது என்று எந்த விதியையும், வழிகாட்டுதலையும் நாங்கள் வழங்கவில்லை. இது அனைத்துமே வதந்தி ஆனவை.

- Advertisement -

இதையும் படிங்க : நாளைக்கு அவர் இந்திய அணிக்காக முதல் போட்டியில் அறிமுக வீரராக விளையாடுவாரு – கேப்டன் ரஹானே உறுதி

இந்திய அணியின் உணவு திட்டங்கள் குறித்து நாங்கள் ஒருபோதும் விவாதித்தது கிடையாது. வீரர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக நாங்கள் எந்த ஒரு கட்டுப்பாடுகளையும் விதிக்க வில்லை என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement