KKR vs CSK : எதிர்பார மிரட்டல் பேட்டிங்கை வெளிப்படுத்திய ரகானே – துபே, உச்சக்கட்ட சிக்ஸர்களை பறக்க விட்ட சிஎஸ்கே சாதனை ஸ்கோர்

CSK vs KKR
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 23ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு உலக புகழ் பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 33வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. சேப்பாக்கத்துக்கு நிகராக ஈடன் கார்டன்ஸ் மைதானத்தை நிரப்பும் வகையில் மஞ்சள் நிற உடை அணிந்து சென்னை கேப்டன் தோனிக்காக ஏராளமான ரசிகர்கள் ஆதரவு கொடுத்த நிலையில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் நித்தீஷ் ராணா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு டேவோன் கான்வே – ருதுராஜ் ஜோடி பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியாக செயல்பட்டு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அனைத்து நல்ல தொடக்கம் கொடுத்தது.

அதில் ருதுராஜ் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 35 (20) ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய அஜிங்கிய ரகானே அதிரடியை துவங்கிய போது அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் அரை சதமடித்து சிறப்பாக செயல்பட்ட டேவோன் கான்வே 4 பவுண்டரி 3 சிக்சருடன் 56 (40) ரன்கள் குவித்து தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சுழலில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய சிவம் துபேவும் ஆரம்பத்திலேயே அதிரடியை துவங்கி விரைவாக ரன்களை சேர்த்து ரன் ரேட்டை 10க்கும் மேல் தொடர வைத்தார்.

- Advertisement -

உச்சக்கட்ட ஸ்கோர்:
அந்த வகையில் மிடில் ஓவர்களில் கொல்கத்தா பவுலர்களை 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய இந்த ஜோடியில் ரகானே 24 பந்துகளில் அரை சதமடித்த நிலையில் மறுபுறம் அவரை விட அதிரடியாக 20 பந்துகளில் அரை சதமடித்த சிவம் துபே 2 பவுண்டரி 5 சிக்சருடன் 50 (21) ரன்கள் குவித்து 3வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சென்னையை வலுப்படுத்தி ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து அதிரடி காட்டிய ரகானே வழக்கத்திற்கு மாறாக திரும்பி விக்கெட் கீப்பருக்கு பின் திசையிலும் நேராகவும் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விட்டு வர்ணனையாளர்கள் மற்றும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் பேட்டிங்கை வெளிப்படுத்தி 200 ரன்களை கடக்க வைத்தார்.

குறிப்பாக வருண் சக்கரவர்த்தி வீசிய 19வது ஓவரின் கடைசி 3 பந்துகளில் 6, 6, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை தெறிக்க விட்ட அவருடன் தனது பங்கிற்கு 2 சிக்சரை பறக்க விட்ட ரவீந்திர ஜடேஜா கடைசி ஓவரில் 18 (7) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் அடுத்து வந்த தோனி 2* (2) ரன்கள் எடுக்க மறுபுறம் ரஹானே 6 பவுண்டரி 5 சிக்ஸருடன் 71 (29) ரன்களை 244.83 என்ற தெறிக்க விடும் ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசினார். அதனால் 20 ஓவர்களில் சென்னை 235/4 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக கெஜ்ராலியா 2 விக்கெட்களை சாய்த்தார்.

- Advertisement -

அப்படி 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்ட சென்னை இந்த சீசனில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் இதே ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இதே கொல்கத்தாவுக்கு எதிராக நடைபெற்ற 19வது லீக் போட்டியில் ஹைதராபாத் 228/4 ரன்கள் எடுத்ததே முந்தைய அதிகபட்ச ஸ்கோராகும்.

இதையும் படிங்க:RCB vs RR : கடைசி ஓவரில் ராஜஸ்தான் எடுத்த தவறான இம்பேக்ட் முடிவால் அஸ்வின் – ஜுரேல் போராட்டம் வீண், ஆர்சிபி திரில் வெற்றி

அதேபோல இந்த போட்டியில் மொத்தம் 18 சிக்சர்களை அடித்த சென்னை இந்த வருடம் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்களை அடித்த அணியாகவும் சாதனை படைத்துள்ளது. அதை தொடர்ந்து பிட்ச் பேட்டிங்க்கு சாதகமாக இருப்பதால் வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரசல் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட கொல்கத்தாவுக்கு எதிராக பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி காண முடியும் என்ற எண்ணத்துடன் சென்னை பந்து வீசி வருகிறது.

Advertisement