குவாலிபயர் 1 : இன்றைய போட்டிக்கான சென்னை அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

CSK

நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த வேளையில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் தற்போது பிளே ஆப் சுற்றில் விளையாட இருக்கின்றன. அதன்படி இன்று நடைபெற இருக்கும் முதல் குவாலிபயர் 1 போட்டியில் முதலிடத்தில் இருக்கும் டெல்லி அணியும், இரண்டாம் இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதால் இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்று தெரிகிறது.

cskvsdc
cskvsdc

அதே வேளையில் தோல்வியடையும் அணி மீண்டும் ஒரு வாய்ப்பு பெற்று குவாலிபயர் இரண்டாவது போட்டியில் விளையாடும். ஆனாலும் இந்த போட்டியில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லவே இரு அணிகளும் முயற்சிக்கும் என்பதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் இருந்து ஆதிக்கத்தை செலுத்தி வரும் இரு அணிகளாக பார்க்கப்படும் டெல்லி மற்றும் சென்னை அணிகள் இப்போட்டியில் மோதுவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டிக்கான சென்னை அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -

csk

ஏனெனில் ஐபிஎல் தொடரின் முதல் பாகத்தில் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து வந்த சென்னை அணியானது இரண்டாம் பாகத்தில் மிடில் ஆர்டர் பிரச்சினை காரணமாக தற்போது சரிவைக் கண்டுள்ளது. இந்நிலையில் இந்த மிடில் ஆர்டர் பிரச்சினை தோனி எவ்வாறு நீக்க போகிறார் ? பிளேயிங் லெவனில் யார் இருப்பார்கள் ? என்பதுமே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க : நீங்க இப்படியே விளையாடினா அது நோ யூஸ். சி.எஸ்.கே வீரருக்கு வார்னிங் கொடுத்த தோனி – விவரம் இதோ

- Advertisement -

அந்த வகையில் நாங்கள் இந்த போட்டியில் விளையாடும் சென்னை அணியின் பிளேயிங் லெவனை உத்தேசமாய் கணித்து உங்களுக்காக வழங்கியுள்ளோம். அதன்படி இன்றைய போட்டிக்கான சென்னை அணியின் பிளேயிங் லெவன் இதோ :

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) டூபிளெஸ்ஸிஸ், 3) மொயின் அலி, 4) சுரேஷ் ரெய்னா, 5) அம்பத்தி ராயுடு, 6) தோனி, 7) ரவீந்திர ஜடேஜா, 8) டுவைன் பிராவோ, 9) ஷர்துல் தாகூர், 10) தீபக் சாஹர், 11) ஹேசல்வுட்

Advertisement