நீங்க இப்படியே விளையாடினா அது நோ யூஸ். சி.எஸ்.கே வீரருக்கு வார்னிங் கொடுத்த தோனி – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது முதல் அணியாக பிளே ஆப் சுற்றின் வாய்ப்பை இழந்து வெளியேறிய சென்னை அணியானது இந்த ஆண்டு மீண்டும் பலமாக திரும்பி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சென்னை அணியானது முதல் இடத்தில் இருக்கும் டெல்லி அணியுடன் குவாலிபயர் போட்டியில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற காரணத்தினால் இந்த போட்டியில் சென்னை சிஎஸ்கே அணி முழு உத்வேகத்தையும் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த 14வது ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் சிறப்பாக செயல்பட்டு வந்த சென்னை அணி இப்போது இரண்டாவது பாகத்தில் சற்று தடுமாறி வருகிறது.

இந்த தடுமாற்றத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது சென்னை அணியின் மிடில் ஆர்டர் வீக்னஸ் தான். ஏனெனில் சென்னை அணியின் துவக்க வீரர்களான டூபிளெஸ்ஸிஸ் மற்றும் கெய்க்வாட் ஆகியோர் ரன் குவிக்க தவறினால் மிடில் ஆர்டரில் பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க தற்போது சென்னை அணியின் கேப்டன் தோனி மொயின் அலியிடம் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

moeen ali 2

அதன்படி துவக்கத்தில் விக்கெட் விழும்போது நிச்சயம் மொயின் அலி மூன்றாவது வீரராக களமிறங்கி 30-35 ரன்களை விரைவாக அடிக்க வேண்டும் என்று தோனி கூறியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் துவக்கத்தில் விக்கெட் விழுந்தாலும் ரன்ரேட் அதிகரிக்கும்படி விளையாடினால் பின்வரிசையில் விளையாடும் வீரர்களுக்கு அது சரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியாவுக்கு பதிலாக உலகக்கோப்பை அணியில் இடம்பெறவுள்ள தமிழக வீரர் – விவரம் இதோ

அதுமட்டுமின்றி முன்கூட்டியே விக்கெட்டுகள் விழுந்து ரன்ரேட் சரிந்தால் அதனை சரிப்படுத்துவது கடினமாக இருக்கும் என்ற காரணத்தினால் மொயின் அலியை விரைவாக ரன் குவிக்க தோனி கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. சென்னை அணியை பொறுத்தவரை துவக்க வீரர்கள் இருவர் மற்றும் ஜடேஜா ஆகிய மூவரைத் தவிர்த்து பெரிய அளவில் இதுவரை இந்த ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாகத்தில் யாரும் சரிவர ரன் குவிக்கவில்லை என்பது உண்மைதான்.

Advertisement