ஹார்டிக் பாண்டியாவுக்கு பதிலாக உலகக்கோப்பை அணியில் இடம்பெறவுள்ள தமிழக வீரர் – விவரம் இதோ

Pandya-4

இந்தியாவில் நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு பரவி வந்த கொரோனா வைரஸ் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி வருகிற 17-ஆம் தேதி துவங்க உள்ள இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தயாராக இருக்கும் வேளையில் இந்த உலகக் கோப்பை தொடரானது ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரவாரமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே இந்த மாத துவக்கத்தில் அறிவிக்கப்பட்டது.

IND

அதன்படி அக்டோபர் 24 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் முதல் போட்டியில் இந்திய அணி கலந்து கொண்டு விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரை எவ்வாறு செயல்பட்டார்கள் என்று உன்னிப்பாக பார்க்கப்பட்டது. அதன்படி இந்திய அணியில் இடம்பெற்ற சில வீரர்கள் இந்த இரண்டாம் பாகத்தின் துவக்கத்தில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் தற்போதைய லீக் சுற்றின் முடிவில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி நிச்சயம் இந்த டி20 உலக கோப்பை தொடரில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்திய அணியில் ஒரே ஒரு பாதகமான விஷயமாக பார்க்கப்படுவது ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியாவின் இடம் மட்டும்தான். ஏனெனில் இந்திய அணியில் அவர் விளையாட வேண்டும் என்றால் நிச்சயம் அவர் பந்து வீசியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.

pandya 1

ஆல்-ரவுண்டராக விளையாடாவிட்டால் ஹார்திக் பாண்டியாவுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் பேட்டிங்கில் பின் வரிசையில் களமிறங்கும் ஹார்டிக் பண்டியா நிச்சயம் பந்துவீசியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதன் இதன் காரணமாக அவர் மீது அழுத்தமும் அதிகரித்து உள்ளது. ஆனால் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அவர் இதுவரை பந்து வீசாததால் நிச்சயம் உலக கோப்பை தொடரில் அவர் பந்து வீச வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

- Advertisement -
Venkatesh-iyer-3
Venkatsh KKR

இந்நிலையில் ஹார்திக் பாண்டியா பந்து வீசாமல் இருந்து வருவதால் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து அவர் நீக்கப்படலாம் என்றும் அவருக்கு பதிலாக கொல்கத்தா அணியின் துவக்க வீரரான வெங்கடேஷ் ஐயர் சேர்க்கப்படலாம் என்றும் தெரிகிறது. வெங்கடேஷ் ஐயர் பேட்டிங்கில் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் அசத்தி வருவதால் அவர் ஆல்-ரவுண்டராக இடம்பெற வாய்ப்பு உள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க : உலகக்கோப்பை அணியில் 3 முக்கிய மாற்றங்களை செய்த அணி நிர்வாகம் – அதிகாரபூர்வ அறிவிப்பு

ஏனெனில் துவக்க வீரராக களமிறங்கி அதிரடி காட்டும் வெங்கடேஷ் ஐயர் பந்துவீச்சிலும் ஒரு குறிப்பிட்ட அளவு தாக்கத்தை ஏற்படுத்துவதால் அவருக்கான வாய்ப்பு தற்போது பிரகாசமாக உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக வில்லை என்றாலும் இது குறித்த பேச்சுகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement