அவங்க 2 பேர் சொல்லித்தான் சி.எஸ்.கே ஏலத்துல வீரர்களை வாங்குனாங்களாம் – வெளியான தகவல்

CSK
- Advertisement -

இந்தியாவில் அடுத்த மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ள பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது கடந்த இரு தினங்களாக பெங்களூர் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு தேர்வு செய்தனர். இதன் காரணமாக வீரர்களின் தொகையும் கோடிகளில் பறந்தது.

CSK-Auction

- Advertisement -

அப்படி இந்த ஏலத்தில் கலந்து கொண்ட 10 அணிகளும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்து அணிகளை உறுதி செய்துள்ளனர். அந்த வகையில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற சிஎஸ்கே அணியும் தங்களது அணியில் விளையாட விருப்பப்பட்ட வீரர்களை தேர்வு செய்து அமர்க்களப்படுத்தியது.

சிஎஸ்கே அணியில் பொதுவாகவே வயது முதிர்ந்த வீரர்கள் அதிகம் இருப்பார்கள் என்று பேசப்பட்ட வேளையில் தற்போது சிஎஸ்கே அணி பல புதிய இளம் வீரர்களை அணியில் இணைத்து ஆச்சரியப்படுத்தி உள்ளது. முக்கிய வீரர்கள் சிலரை அணியிலிருந்து வெளியேற்றினாலும் அவர்களுக்கு இணையான வீரர்களை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது.

Fleming

இப்படி சிஎஸ்கே அணி வீரர்களை ஏலத்தில் எடுத்ததற்கு பின்னால் உள்ள ஒரு சுவாரசியமான விஷயத்தை சி.எஸ்.கே அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்த மெகா ஏலத்தின் இரண்டு நாளின் போதும் கேப்டன் தோனியும், பயிற்சியாளர் பிளமிங்கும் முழுவதுமாக எங்களுடன் தொலைபேசி தொடர்பில் இருந்தார்கள் என்றும் அவர்களின் ஆலோசனைப்படிதான் வீரர்களை தாங்கள் தேர்வு செய்தோம் என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாக தோனி மற்றும் பிளமிங் ஆகியோரின் ஆலோசனைப்படியே தற்போது வீரர்கள் தேர்வு நடைபெற்றுள்ளதால் நிச்சயம் இந்த தொடரிலும் சென்னை அணி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் சி.எஸ்.கே அணியிலிருந்து இந்தாண்டு கழட்டிவிடப்பட்ட வீரர்கள் – முழு லிஸ்ட் இதோ

எப்போதுமே அணிக்கு என்ன தேவை? எந்தெந்த வீரர்களை வாங்கலாம் என்று முழுவதுமாக யோசிக்கும் தோனி இம்முறையும் அவ்வாறே சில இளம் வீரர்களை தேர்வு செய்துள்ளார். நிச்சயம் அவர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவர்களும் பெரிய வீரர்களாக ஜொலிப்பார்கள் என்பது உறுதி. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் முதல் அணியாக தொடரிலிருந்து வெளியேறிய சென்னை அணியானது போன வருடம் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு சென்றது மட்டுமின்றி சாம்பியன் படத்தையும் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement