சாம்பியன்ஸ் சி.எஸ்.கே அணியிலிருந்து இந்தாண்டு கழட்டிவிடப்பட்ட வீரர்கள் – முழு லிஸ்ட் இதோ

CSK-2
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் வெற்றிகரமாக பெங்களூருவில் நடைபெற்று முடிந்துள்ளது. பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய 2 நாட்கள் மெகா அளவில் நடந்த இந்த ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்றார்கள். இவர்களில் தரமானவர்களை வாங்குவதற்காக அனைத்து 10 அணிகளிடமும் கடும் போட்டி நிலவியது. இந்த ஏலத்தில் சி.எஸ்.கே அணி எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.

CSK-Auction

இறுதியில் முதல் நாளில் 74 வீரர்களும் 2வது நாளில் 130 வீரர்களும் பல கோடி ரூபாய்களுக்கு ஏலம் போனார்கள். மொத்தமாக இந்த ஏலத்தில் வாங்கப்பட்ட 204 வீரர்களுக்காக அனைத்து 10 அணிகளும் 551 கோடி ரூபாய்களை யோசிக்காமல் செலவு செய்துள்ளன.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ்:
இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ரவீந்திர ஜடேஜா (16 கோடி), எம்எஸ் தோனி (12 கோடி), மொய்ன் அலி (8 கோடி), ருதுராஜ் கைக்வாட் (6 கோடி) ஆகிய 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. மொத்தம் அனுமதிக்கப்பட்ட 90 கோடிகளில் இந்த 4 வீரர்களுக்கு செலவு செய்த தொகை போக எஞ்சிய 48 கோடிகளுடன் அந்த அணி நிர்வாகம் இந்த ஏலத்தை சந்தித்தது.

CSK-Auction

இதை அடுத்து நடந்த ஏலத்தில் ராபின் உத்தப்பா, அம்பாதி ராயுடு, ட்வயன் ப்ராவோ, தீபக் சஹர் போன்ற அனுபவ வீரர்களை மீண்டும் வாங்கிய அந்த அணி நிர்வாகம் டேவோன் கான்வே, ஆடம் மில்னே போன்ற ஒரு சில புதிய வீரர்களையும் முதல் முறையாக தங்கள் அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்தது. அதேபோல் சிவம் துபே, மிட்சேல் சட்னர் போன்ற ஆல்ரவுண்டர் வீரர்களையும் ராஜ்வர்தன் ஹங்கேர்க்கர் போன்ற சில இளம் வீரர்களையும் சென்னை அணி நிர்வாகம் வாங்கியது. மேலும் தமிழகத்தை சேர்ந்த ஹரி நிஷாந்த், நாராயன் ஜெகதீசன் ஆகிய 2 வீரர்களையும் கடைசி நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது.

- Advertisement -

முக்கிய 3 தூண்கள்:
இருப்பினும் கடந்த சீசன்களில் முக்கிய தூண்களாக செயல்பட்ட 3 வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்காதது அந்த அணி ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

raina

1. சுரேஷ் ரெய்னா : கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்டது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த இந்தியாவின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா காலப்போக்கில் சென்னை அணியின் பேட்டிங்கில் முதுகெலும்பாக மாறினார். குறிப்பாக லீக் சுற்று முதல் நாக் அவுட் சுற்று வரை காலம் காலமாக சென்னை அணிக்காக பல ஆயிரம் ரன்களை குவித்த அவர் சென்னையின் பல சரித்திர வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

2016, 2017 ஆகிய ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் தடைபெற்ற போது குஜராத் அணிக்கு கேப்டனாக விளையாடிய அவர் 2018இல் சென்னை அணி மீண்டும் திரும்பிய போது அப்போது முதல் கடந்த சீசன் வரை தொடர்ந்து அந்த அணிக்காக விளையாடி வந்தார். எம்எஸ் தோனிக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு முகமாக காட்சியளித்த அவரை சென்னை ரசிகர்கள் “சின்ன தல” என தலையில் வைத்துக் கொண்டாடினார்கள். இருப்பினும் கடந்த சில வருடங்களாக பழைய பன்னீர்செல்வமாக ரன்கள் அடிக்க முடியாமல் மோசமான பார்மில் இருந்த அவரை இம்முறை எந்த அணியும் ஏலத்தில் வாங்க முன்வரவில்லை. ஆனால் வரலாற்றில் சென்னை அணிக்காக ஏராளமாக பங்காற்றிய போதிலும் அவரை சென்னை அணி நிர்வாகம் கண்டுக்காமல் விட்டது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

raina

மற்ற அணிகள் அவரை வாங்காமல் இருந்த வேளையில் குறைந்தபட்சம் 2 கோடி அடிப்படை விலையில் வாங்கி பெஞ்சிலாவது அமர வைத்து இருக்கலாமே என சென்னை ரசிகர்கள் வேதனையை தெரிவிக்கிறார்கள். இத்தனைக்கும் 25 வீரர்களை தேர்வு செய்தது போக சென்னை அணியிடம் இன்னும் கூட 2.95 கோடி ஏலத்தொகை மீதம் உள்ளதால் வேண்டுமென்றே சுரேஷ் ரெய்னாவை சென்னை வாங்கவில்லையா என்ற கேள்வியை பல ரசிகர்கள் முன் வைக்கிறார்கள்.

- Advertisement -

2. பப் டு பிளேஸிஸ் : சுரேஷ் ரெய்னாவை போலவே கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த நட்சத்திர வீரர் பப் டு பிளேஸிஸ் சென்னை அணியில் முக்கிய முதுகெலும்பு வீரராக விளையாடி வந்தார். சுரேஷ் ரெய்னா கூட பார்ம் இல்லாத காரணத்தால் சென்னை வாங்கவில்லை என வைத்துக்கொள்வோம். ஆனால் டு பிளேஸிஸ் கடந்த வருடம் 633 ரன்கள் விளாசி 4வது முறையாக சென்னை கோப்பையை வெல்ல முக்கிய துருப்பு சீட்டாக செயல்பட்டார்.

Faf du plessis

இருப்பினும் ஏலத்தில் 3 – 4 கோடிகளுக்கு மேல் அவரின் விலை சென்ற போது அவரை வாங்குவதற்கு சென்னை அணி போட்டி போடவில்லை. மாறாக ராகுல் தேவாடியாவை வாங்க 9 கோடிகள் வரை சென்னை அணி நிர்வாகம் போட்டி போட்டது ரசிகர்களை கோபமடையச் செய்தது. அதே சமயம் அவரின் மதிப்பை உணர்ந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 7 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

3. ஷார்துல் தாகூர் : சமீப காலங்களாக 3 வகையான இந்திய அணியிலும் ஆல்-ரவுண்டராக அசத்தும் ஷார்துல் தாகூர் முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் தோனியால் மிளிர தொடங்கியவர் என்பது சென்னை ரசிகர்களுக்கு தெரியும்.

Thakur-1

அப்படிப்பட்ட இவர் முன்பைவிட தற்போது பேட்டிங் மற்றும் பவுலிங்கில் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் போதிலும் இவரை சென்னை அணி நிர்வாகம் வாங்கவில்லை. இருப்பினும் இவரை கடும் போட்டிக்கு பின்னர் 10.75 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது.

Advertisement