என்னங்க சுனில் நரேன். அவரை மாதிரியே பவுலிங் பண்ணும் 21 வயது மிஸ்டரி ஸ்பின்னரை தேர்வு செய்த – சி.எஸ்.கே

CSK-Auction
- Advertisement -

பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் நேற்று பெங்களூரு நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அறிவித்தபடி பிப்ரவரி 12 மற்றும் பிப்ரவரி 13 ஆகிய இரு தேதிகளில் தற்போது ஐபிஎல் ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களது அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு தேர்வு செய்து வருகின்றன. ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் தற்போது புதிதாக இரண்டு அணிகள் உள்ளதால் மொத்தம் பத்து அணிகளும் இந்த ஏலத்தில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்து வருகிறார்கள்.

CSK-Auction

- Advertisement -

அந்த வகையில் சென்னை அணியின் ரசிகர்களும் நம் அணிக்கு எந்தெந்த வீரர்கள் தேர்வு ஆகிறார்கள் என்பதை காண மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சென்னை அணி தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வீரர்களும் நிச்சயம் ஸ்பெஷலான வீரர்கள் என்றே கூறலாம். ஏனெனில் எப்போதும் சென்னை அணியில் விளையாடும் புதுமுக வீரர்களாக இருந்தாலும் சரி சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலிக்கத் துவங்கி விடுவார்கள்.

இதன் காரணமாகவே நமது அணியில் எந்தெந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. அந்த வகையில் நேற்று சிஎஸ்கே அணியில் சில வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட வேளையில் இன்றும் புதிதாக சில வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அப்படி தேர்வு செய்யப்பட்ட ஒரு வீரர் தான் தற்போது அனைவரது மத்தியிலும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறார்.

maheesh theekshana

அதன்படி வெறும் 70 லட்ச ரூபாய் மட்டுமே செலவு செய்து 21 வயதான இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனாவை சென்னை அணி தேர்வு செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது. ஏனெனில் 21 வயது மட்டுமே நிரம்பிய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை இலங்கை அணிக்காக 4 ஒருநாள் போட்டிகள் மற்றும் 11 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். டி20 போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 6 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றியுள்ளார்.

- Advertisement -

இவர் குறைந்த அனுபவம் கொண்டவர் என்றாலும் சுனில் நரைன் போன்றே பந்து வீசும் சிறப்பம்சம் உடையவர். இதன் காரணமாக மிஸ்டரி ஸ்பின்னரான அவரை சென்னை அணி தேர்வு செய்துள்ளது. அவரது பந்து வீச்சை பேட்ஸ்மேன்கள் எளிதில் கணிப்பது கடினம். இதன் காரணமாகவே சென்னை அணி இவருக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த தொகையில் எடுத்துள்ளது. சுனில் நரைன் பந்து வீசும் போது எவ்வாறு பேட்ஸ்மேன்களுக்கு அதனை கணிக்க கடினமாக உள்ளதோ அதே போன்று இவரது பந்துவீச்சை கணிப்பதும் மிக கடினம் என்ற அடிப்படையில்தான் மிஸ்டரிஸ் பின்னரான இவர் சென்னை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : போன வருஷம் சென்னை அணியை பிரித்தெடுத்த ராஜஸ்தான் வீரரை சாமர்த்தியமாக ஏலத்தில் எடுத்த சி.எஸ்.கே

இவரின் தேர்வு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. இதுவரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடாத இவர் தற்போது சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு அவர் சென்னை அணியில் விளையாடுவதை காண ரசிகர்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement