போன வருஷம் சென்னை அணியை பிரித்தெடுத்த ராஜஸ்தான் வீரரை சாமர்த்தியமாக ஏலத்தில் எடுத்த சி.எஸ்.கே

CSK-Auction
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் 15வது சீசனானது மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக தற்போது பெங்களூருவில் ஐபிஎல் வீரர்களின் ஏலம் கடந்து இரு தினங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை இந்த ஏலத்தில் தேர்வு செய்யும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும் உள்ளது.

csk

- Advertisement -

ஏனெனில் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு சென்ற அணியாகவும், நான்கு முறை கோப்பையை கைப்பற்றிய அணியாகவும் உள்ள சிஎஸ்கே அணியானது இம்முறை எந்தெந்த வீரர்களின் மீது தங்களது கவனத்தை செலுத்துகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது சிஎஸ்கே அணி ஏற்கனவே அணியில் தக்க வைக்கப் பட்ட நான்கு வீரர்களை தவிர்த்து சில வீரர்களை வாங்கியுள்ளது. அதன்படி சிஎஸ்கே அணி நேற்று ராபின் உத்தப்பா, டுவைன் பிராவோ, தீபக் சாஹர், அம்பத்தி ராயுடு ஆகியோரை வாங்கி இருந்த நிலையில் இன்று இரண்டாம் நாளின் ஏலத்தில் பெரிய அளவில் எந்த வீரர்கள் மீதும் கவனத்தை செலுத்தாமல் அமைதி காத்து வருகிறது.

dube

இந்நிலையில் இன்று ஏலத்தில் சென்னை அணியின் ஒரு தேர்வு அனைவரையும் அசர வைத்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஆல்ரவுண்டர் ஷிவம் துபேவை 4 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணி ஏலத்தில் வாங்கியுள்ளது. ஆல்ரவுண்டர் ஷிவம் துபே பேட்டிங் மட்டுமின்றி மித வேகப்பந்து வீச்சாளர் என்பதனால் அவருக்கு இந்த தொகையை சிஎஸ்கே அணி கொடுத்து வாங்கியுள்ளது.

- Advertisement -

இதற்கு முக்கிய காரணம் யாதெனில் கடந்த ஆண்டு சிஎஸ்கே ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாடும் போது 189 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கு ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. பொதுவாகவே பந்துவீச்சில் நல்ல பலம் கொண்ட சிஎஸ்கே அணி எளிதாக அந்த போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 17.3 ஓவர்களில் 190 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் ஷிவம் துபே ஆட்டமிழக்காமல் 42 பந்துகளை சந்தித்து 64 ரன்களை குவித்து இருந்தார்.

இதையும் படிங்க : 2019 ல பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 2 வீரர்கள் ஒரே அணியிலா? – மோதல் ஏற்படுமா?

இந்த ஒரு அதிரடி ஆட்டம் தனி ஆளாக நின்று சிஎஸ்கே அணியை வீழ்த்தியது. இதன்காரணமாகவே ஷிவம் துபேவை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்து உள்ளது. கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியை தனது அதிரடியான பேட்டிங்கால் பிரித்தெடுத்த ஷிவம் துபேவை தற்போது சென்னை அணி தேர்வு செய்துள்ளது ஒரு அசத்தலான விடயமாக பார்க்கப்படுகிறது. மேலும் சிஎஸ்கே அணியில் எப்போதும் ஒரு திறமையுள்ள வீரர் வந்து விட்டால் நிச்சயம் அவரின் திறமை மேலும் மிளிரும் என்பதனால் ஷிவம் துபே நிச்சயம் சிஎஸ்கே அணியில் விளையாடும் போது மிகப்பெரிய அளவில் ஜொலிப்பார் என்பது உறுதி.

Advertisement