2019 ல பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 2 வீரர்கள் ஒரே அணியிலா? – மோதல் ஏற்படுமா?

Buttler
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பங்கேற்கும் 590 வீரர்களில் முதல் நாளன்று சுமார் 161 வீரர்களின் பெயர்கள் ஏலத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் முதலாவதாக ஷிகர் தவான், ரவிச்சந்திரன், அஸ்வின், டேவிட் வார்னர் போன்ற நட்சத்திர வீரர்கள் முதல் பட்டியலாக ஏலம் விடப்பட்டார்கள்.

hugh

- Advertisement -

நேற்றைய முதல் நாளில் ஒரு சில வீரர்கள் உச்சத்தைத் தொட்டு பல கோடி ரூபாய்களுக்கு வாங்கப்பட்டார்கள். குறிப்பாக இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிசானை ரூபாய் 15.25 கோடி என்ற மிரளவைக்கும் தொகைக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

ரவிச்சந்திரன் அஷ்வின்:
அதேபோல இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரூபாய் 14 கோடிகளுக்கு விளையாட மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 12.25 கோடிகளுக்கு எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் அவரை விரைவில் கேப்டனாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ashwin 1

நேற்றைய ஏலம் துவங்கியதுமே அறிவிக்கப்பட்ட முதல் பட்டியல் பெயரில் இடம்பெற்றிருந்த நட்சத்திர வீரர்களில் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயரும் இடம் பிடித்திருந்தது. ரூபாய் 2 கோடி அதிகபட்ச அடிப்படை விலை பிரிவின் கீழ் பங்கேற்ற அவரை வாங்குவதற்கு டெல்லி மற்றும் ராஜஸ்தான் போன்ற அணிகள் கடுமையாக மோதிக்கொண்டன. இறுதியில் முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அவரை ரூபாய் 5 கோடிகளுக்கு வெற்றிகரமாக ஒப்பந்தம் செய்தது.

- Advertisement -

நீரும் நெருப்பும்:
ரவிச்சந்திரன் அஷ்வின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்ற செய்தி வெளியானதுமே பல ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். ஏனென்றால் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் ஒரு போட்டியில் மோதின.

Ravichandran Ashwin Jos Buttler Mankad

அந்தப் போட்டியில் 185 என்ற இலக்கை சேசிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் அபாரமாக பேட்டிங் செய்து 69 ரன்கள் குவித்து வெற்றியை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் பந்து வீசிய ஒரு ஓவரில் இங்கிலாந்தை சேர்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்து அதிரவிட்டார். இந்த சம்பவம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்த இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இனி மன்கட் இருக்காது:
அந்த சமயத்தில் தனது அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருந்த ஜோஸ் பட்லரை அவுட் செய்யும் வேறு வழியே இல்லாத காரணத்தால் மன்கட் முறையில் அஷ்வின் அவுட் செய்து விட்டதாக சமூக வலைதளங்களில் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். இருப்பினும் கிரிக்கெட் விதிமுறைகளுக்கு உட்பட்டே செயல்பட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அதற்கு பதிலடி கொடுத்திருந்தார். ஆனால் அந்த வகையில் அவுட் செய்ததற்காக ஜோஸ் பட்லர் கடும் அதிருப்தியை தெரிவித்திருந்தார்.

joes buttler

உலகையே திரும்பி பார்க்க வைத்த அந்த தருணம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத ஒன்றாக அமைந்தது. அந்த நிகழ்வுக்கு பின் அஷ்வின் – பட்லர் ஆகியோர் பேசிக்கொள்ளாமல் நீரும் நெருப்புமாக இருந்தார்கள் என்றே கூறலாம். தற்போது 3 ஆண்டுகளுக்கு பின் இந்த இருவரும் ஒரே அணியில் விளையாட உள்ளதால் இவர்களுக்குள் சண்டை சச்சரவு ஏதும் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் நாங்கள் அவ்வாறு செயல்பட மாட்டோம் என்ற வகையில் நேற்றைய ஏலத்துக்கு பின் அஸ்வின் மற்றும் பட்லர் ஆகியோர் பேசிய வீடியோக்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டது.

- Advertisement -

அதில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது பின்வருமாறு. “ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் கடந்த 2018ஆம் ஆண்டே என்னை வாங்க கடுமையாக முயற்சித்தார்கள். தற்போது அவர்கள் அணியில் விளையாட இருக்கும் நான் என்னால் முடிந்த அனைத்தையும் கொடுக்க உள்ளேன். அதேபோல் சஞ்சு சாம்சன் மற்றும் இதர ராஜஸ்தான் வீரர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளேன். குறிப்பாக ஜோஸ் பட்லர் உடன் உடை மாற்றும் அறையை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க : வெறும் 20 லட்சத்தில் இருந்து ஐபிஎல் ஏலத்தால் கோடீஸ்வரர்களாக மாறிய 2 தமிழக வீரர்கள் – லிஸ்ட் இதோ

அதற்கு பதிலளிக்கும் வகையில் ஜோஸ் பட்லர் பேசியது பின்வருமாறு. “ஹாய் அஷ்வின். நான் ஜோஸ் பட்லர், கவலை வேண்டாம் நான் இனிமேல் கிரீஸ்க்கு உள்ளே தான் இருப்பேன். மேலும் உடை மாற்றும் அறையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என கலகலப்புடன் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் நீரும் நெருப்புமாக இருந்த இவர்கள் தற்போது ஐபிஎல் ஏலத்தில் ஒரே அணியில் விளையாட உள்ளதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Advertisement