வெறும் 20 லட்சத்தில் இருந்து ஐபிஎல் ஏலத்தால் கோடீஸ்வரர்களாக மாறிய 2 தமிழக வீரர்கள் – லிஸ்ட் இதோ

tn
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்த ஏலத்தில் உலகம் முழுவதிலும் இருந்து 590 வீரர்கள் பங்கேற்று வருகிறார்கள். இதில் முதல் நாளில் நடந்த ஏலத்தில் சுமார் 161 வீரர்களின் பெயர்கள் மட்டும் அறிவிக்கப்பட அதில் 74 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்க பட்டார்கள்.

IPL-bcci

- Advertisement -

முதல் நாளில் எதிர்பார்க்கப்பட்டது போலவே டேவிட் வார்னர், ஸ்ரேயாஸ் அய்யர், ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற நட்சத்திர வீரர்களை வாங்க அனைத்து அணிகளும் கடுமையாக போட்டி போட்டன. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர் 12.25 கோடிகளுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். எனவே விரைவில் இவர் அந்த அணியின் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வீரர்கள்:
அதேபோல் இந்தியாவின் வளர்ந்து வரும் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷானை ரூபாய் 15.25 கோடிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் கடும் போட்டி போட்டு இறுதியில் வெற்றிகரமாக வாங்கியது. இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2வது இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

TN

அத்துடன் ரூபாய் 14 கோடிகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட தீபக் சஹர் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை படைத்தார். இவர்களைப் போலவே தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் போன்ற மூத்த வீரர்களும் 5 கோடிகள் என்ற மிகப் பெரிய தொகைக்கு ஏலம் போனார்கள்.

- Advertisement -

முருகன் அஷ்வின்:
அதேசமயம் வாசிங்டன் சுந்தர், சாருக்கான் போன்ற ஜூனியர் தமிழக வீரர்கள் சீனியர்களை முந்தி 8 கோடிகளுக்கும் மேல் ஏலத்தில் வாங்கப்பட்டது தமிழக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. மறுபுறம் இந்த மெகா ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் முருகன் அஸ்வின் வெறும் 20 லட்சம் அடிப்படை விலை தொகைக்கு பங்கேற்றார். கடந்த சீசன்களில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடிய அவரை மீண்டும் வாங்க பஞ்சாப் அணி முயன்றபோது மும்பையும் போட்டி போட்டது. இறுதியில் 1.60 கோடிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

murugan ashwin

சாய் கிசோர்:
அவரை போலவே தமிழகத்தின் மற்றொரு இளம் வீரர் சாய் கிசோரும் 20 லட்சம் அடிப்படை விலையில் இந்த ஏலத்தில் பங்கேற்றார். கடந்த சில சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட ஒப்பந்தமாகி இருந்த அவருக்கு இதுவரை ஒருமுறை கூட களத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் கடந்த வருடம் நடந்த சயீத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை போன்ற உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழக அணிக்காக அபாரமாக பந்து வீசிய அவரை இந்த ஏலத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் 3 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

திறமை இருந்த போதும் கடந்த காலங்களில் சென்னை அணியில் வெறும் பெஞ்சில் அமர்ந்து கொண்டிருந்த அவர் வரும் சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியில் தனது புதிய கிரிக்கெட் கேரியரை தொடங்க உள்ளார்.

Sai-kishore

இந்த 2 தமிழக கிரிக்கெட் வீரர்களும் மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் ஒப்பந்தமாகியுள்ளது தமிழக ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும் ஹரி நிஷாந்த், சித்தார்த் போன்ற மேலும் சில இளம் தமிழக வீரர்களை முதல் நாள் ஏலத்தில் எந்த அணியும் வாங்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement