- Advertisement -
ஐ.பி.எல்

நான் இல்லனாலும் பரவாயில்லை.. பதிரானா இருக்குனும்.. சி.எஸ்.கே அணியக்கு தோனி – போட்ட கண்டிஷன்

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் வேளையில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து தற்போது அடுத்த சீசனிற்கான வேலைகள் தற்போதே மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தக்கவைக்கப்பட இருக்கும் மதீஷா பதிரானா :

அந்த வகையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக இந்த ஆண்டு இறுதியில் வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பிசிசிஐ அறிவிக்கும் விதிமுறைகளின் அடிப்படையில் தக்க வைக்கப்படும் வீரர்கள் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் இந்த மெகா ஏலத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக இந்த மெகா ஏலம் குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு அணியும் தங்களது அணியும் தக்க வைக்க வேண்டிய முக்கிய வீரர்களின் பட்டியலை தற்போது தயார் செய்து வரும் வேளையில் சென்னை அணியில் மதீஷா பதிரானவை முதல் வெளிநாட்டு வீரராக தக்கவைக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே பதிரானாவை கண்காணித்து வரும் தோனி சிஎஸ்கே அணியின் எதிர்கால நட்சத்திரம் அவர்தான் என்பதனால் அவருக்கு நிறையவே ஆதரவினை வழங்கி உள்ளார். இந்நிலையில் அடுத்த ஆண்டு தான் விளையாவேனா? மாட்டேனா? என்பதை இதுவரை அறிவிக்காத தோனி முதல் வீரராக பதிரானாவை தக்கவைக்க வேண்டும் என்று நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் தோனியின் ஆலோசனையை ஏற்றுக்கொண்ட நிர்வாகமும் தற்போது பதிரானாவை தக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் சென்னை வந்திருந்த பதிரானாவின் மேனேஜர் அமிலா இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் அதன்பிறகு நாடு திரும்பிய அவர் விரைவில் சிறப்பான ஒரு அறிவிப்பு உங்களுக்காக வெளியாக இருக்கிறது என்றும் தனது சமூக வலைதளத்தில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியில் இருந்து விலகி கொல்கத்தா அணிக்கு மென்டராக மாறியது ஏன்? – பிராவோ விளக்கம்

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பதிரானா தக்க வைக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதே போன்று தற்போது 43 வயதாகும் தோனி இதுவரை தான் அடுத்த தொடரில் விளையாடவேனா? மாட்டேனா? என்பது குறித்த உறுதியான தகவலை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -