சி.எஸ்.கே அணியில் இருந்து விலகி கொல்கத்தா அணிக்கு மென்டராக மாறியது ஏன்? – பிராவோ விளக்கம்

Bravo
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டரான பிராவோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தாலும் தொடர்ந்து உலகம் முழுவதும் நடைபெற்று வந்த டி20 லீக் தொடர்களில் முக்கிய வீரராக இடம் பிடித்து விளையாடி வந்தார். அந்த வகையில் ஐபிஎல் தொடரிலும் அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு வரை விளையாடி இருந்தார்.

கொல்கத்தா அணியின் மென்டராக மாறியது ஏன்? :

ஐபிஎல் தொடரில் 2008 ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 2022 ஆம் ஆண்டு வரை 171 போட்டியில் விளையாடி 1500-க்கும் மேற்பட்ட ரன்களையும், 200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிராவோ தொடர்ந்து சென்னை அணியுடனே பயணிக்க இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் சென்னை அணியின் நிர்வாகமும் அவரை சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமித்தது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் சென்னை அணியின் பந்துவீச்சு ஆலோசகராக இருந்து வந்தார். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற முடிந்த கரீபியன் லீக் தொடரில் விளையாடியிருந்த அவர் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்த ஓய்வு அறிவிப்பு வெளியான கையோடு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய மென்டராகவும் பிராவோ அறிவிக்கப்பட்டுள்ளார். இப்படி ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இருந்து விலகி கொல்கத்தா அணிக்காக பிராவோ மாறியது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பிள்ளது. ஏனெனில் சிஎஸ்கே அணிக்காக கடந்த பல ஆண்டு காலமாக விளையாடிய அந்த அவர் இப்படி திடீரென கொல்கத்தா அணிக்கு மாறுவது ஏன்? என்பது அனைவர்க்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்நிலையில் பிராவோ இதுகுறித்து கூறிய கருத்தில் குறிப்பிட்டதாவது : நான் டிரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாடி இருக்கிறேன். நான் நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் அந்த அணியை எதிர்த்தும் பல்வேறு தொடர்களில் விளையாடி உள்ளேன். நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகம் என்னை சிறப்பாக கையாண்டார்கள்.

இதையும் படிங்க : 10 வருடத்தில் 34.. கான்பூர் வாய்ப்பையும் ராகுலை விட்டா அந்த 2 பேர் வந்துருவாங்க.. எச்சரித்த சஞ்சய் மஞ்ரேக்கர்

எனவே இம்முறை நான் அந்த அணியின் நிர்வாகத்திற்காக புதிய பரிமாணத்தை எடுக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது அந்த அணியின் மென்டாராக செயல்பட இருக்கிறேன். எதிர்வரும் இளம் தலைமுறைக்கு என்னுடைய அனுபவத்தை பகிர தயாராக இருக்கிறேன் என பிராவோ கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement