10 வருடத்தில் 34.. கான்பூர் வாய்ப்பையும் ராகுலை விட்டா அந்த 2 பேர் வந்துருவாங்க.. எச்சரித்த சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar
- Advertisement -

கர்நாடகாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமானார். ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடியதால் தடுமாறிய அவர் 2018, 2019 ஐபிஎல் தொடரில் ஓப்பனிங் வீரராக அதிரடியாக விளையாடினார். அதனால் இந்திய அணியில் ஷிகர் தவானை தள்ளிய அவர் ரோஹித் சர்மாவுடன் களமிறங்கும் துவக்க வீரராக முன்னேறியதுடன் துணை கேப்டன் அந்தஸ்தையும் பெற்றார்.

நாளடைவில் அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள கொஞ்சம் மெதுவாக விளையாடத் துவங்கிய அவர் 2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதனால் வெள்ளைப்பந்து அணியில் ஓப்பனிங் மற்றும் துணை கேப்டன்ஷிப் பொறுப்பை இழந்த அவர் 2023 உலகக் கோப்பையில் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக விளையாடி அசத்தினார்.

- Advertisement -

10 வருடத்தில் 34 சராசரி:

ஆனால் மீண்டும் 2024 ஐபிஎல் தொடரில் மெதுவாக விளையாடியதால் வெள்ளைப்பந்து அணியில் இடத்தை இழந்துள்ள அவருக்கு போட்டியாக டெஸ்ட் அணியில் சர்பராஸ் கான், துருவ் ஜுரேல், ஆகியோர் வந்துள்ளனர். அதனால் குறைந்தபட்சம் டெஸ்ட் அணியில் தமது இடத்தை தக்க வைத்துக்கொள்ள வங்கதேச தொடரில் ராகுல் சிறப்பாக விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அந்த வாய்ப்பில் முதல் போட்டியில் அரை சதம் கூட அடிக்காத ராகுல் மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார். இந்நிலையில் கடந்த 10 வருடங்களாக 51 போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் வெறும் 34 மோசமான சராசரியை கொண்டுள்ளதாக சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார். எனவே கான்பூரில் துவங்கியுள்ள 2வது போட்டியே ராகுலுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

போட்டிக்கு சர்பராஸ், ஜுரேல்:

“கேஎல் ராகுல் மீது நான் நெருக்கமாக கண்களை வைத்துக் கொள்வேன். சென்னை டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் விளையாடியதைப் போல் அவர் தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாக விளையாடுகிறாரா என்பதை பார்க்க வேண்டும். அல்லது 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதைப் போல் மீண்டும் விளையாடுகிறாரா என்பதையும் பார்க்க வேண்டும். ஏனெனில் இந்திய மண்ணில் விளையாடும் போது அவருடைய இடத்தை பெறுவதற்கு பல இளம் பேட்டர்கள் கதவை வலுவாக தட்டுகிறார்கள்”

இதையும் படிங்க: முகமது ஷமி போறாரோ இல்லையோ.. ஆனா அந்த பிளேயர் ஆஸ்திரேலியா பறப்பது உறுதி – ஜாஹீர் கான் கருத்து

“ராகுல் மீது அணி நிர்வாகம் அல்லது தேர்வுக்குழுவில் யாரோ ஒருவர் பெரிய தன்னம்பிக்கை வைத்துள்ளார்கள். ஏனெனில் இவ்வளவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வெறும் 34 சராசரியை கொண்டிருந்தும் அவருக்கு மீண்டும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது ராகுலுக்கு கான்பூரில் 2 இன்னிங்ஸ் உள்ளது. அந்த வாய்ப்பிலும் அப்படியே விளையாடினால் கே.எல். ராகுலின் நீண்டகால பேட்டிங் தேர்வு பற்றி நீங்கள் சிந்திக்க துவங்கலாம்” என்று கூறினார்.

Advertisement