- Advertisement -
ஐ.பி.எல்

இன்று துவங்கிய சி.எஸ்.கே – மும்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை.. விலை எவ்வளவு தெரியுமா? – எங்கு, எப்படி வாங்கலாம்?

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான 18 ஆவது சீசனானது மார்ச் 22-ஆம் தேதி கொல்கத்தா மைதானத்தில் கோலாலமாக துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்த இருக்கிறது. இதற்காக தற்போது இரு அணி வீரர்களும் கொல்கத்தாவில் பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

சி.எஸ்.கே – மும்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை துவங்கியது :

இந்த தொடரின் இரண்டாவது போட்டியானது மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பையை கைப்பற்றிய சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இவ்விரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று புதன்கிழமை காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் துவங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டிக்கெட்டினை எவ்வாறு வாங்கலாம்? இந்த டிக்கெட் விலை குறைந்தபட்ச எவ்வளவு? அதிகபட்சம் எவ்வளவு? என்பது குறித்த பல முக்கியமான தகவல்களை இங்கே நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

அதன்படி சிஎஸ்கே மும்பை ஆகிய அணிகளுக்கு இடையேயான இந்த போட்டிக்கான டிக்கெட் மார்ச் 19-ஆம் தேதியான இன்று காலை 10.15 முதல் ஆன்லைன் வாயிலாக துவங்கியுள்ளது. அதன்படி ரசிகர்கள் அனைவரும் www.chennaisuperking.com என்கிற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டிக்கான டிக்கெட் குறைந்தபட்சம் 1700 முதல் அதிகபட்சம் 7,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட் மட்டுமே வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல், கள்ள மார்க்கெட்டில் டிக்கெட் விற்பனை போன்ற தேவையற்ற செயல்களை தவிர்க்கவே மைதானத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர் மூலம் விற்பனை செய்யாமல் ஆன்லைன் மூலமாக டிக்கெட் விற்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்த 2025 ஐ.பி.எல் தொடரில் நான் அந்த வரிசையில் தான் பேட்டிங் செய்ய விரும்புகிறேன் – ஷ்ரேயாஸ் ஐயர்

மேலும் போட்டி நாளன்று மாலை 5 மணி முதல் ரசிகர்கள் உரிய டிக்கெட் வைத்திருந்தால் மைதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் போட்டி நடைபெறும் போது மைதானத்தின் வெளியில் இருந்து எந்த பொருட்களையும் எடுத்து வரக்கூடாது என்றும் பல முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவை அனைத்தும் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -