இந்த 2025 ஐ.பி.எல் தொடரில் நான் அந்த வரிசையில் தான் பேட்டிங் செய்ய விரும்புகிறேன் – ஷ்ரேயாஸ் ஐயர்

Shreyas Iyer
- Advertisement -

கடந்த 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கேப்டனாக செயல்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் தனது மிகச் சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்தியதால் கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. கடந்த ஆண்டு லீக் போட்டிகளில் இருந்தே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றிலும் சரி, இறுதிப் போட்டியிலும் சரி எந்தவொரு சிக்கலையும் சந்திக்காமல் எளிதாக கோப்பையை வென்றிருந்தது.

இந்த வருஷம் நான் விளையாட அடைபடும் பேட்டிங் ஆர்டர் இதுதான் : ஷ்ரேயாஸ் ஐயர்

கொல்கத்தா அணியில் பலம் வாய்ந்த வீரர்கள் பலர் இருந்தாலும் அந்த அணியை சிறப்பாக கேப்டன்சி செய்து வழிநடத்திய ஷ்ரேயாஸ் ஐயர் அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லவும் மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார். ஆனாலும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக அந்த அணி அவர்களது டீமிலிருந்து அவரை விடுவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக மெகா ஏலத்தில் கலந்து கொண்ட ஷ்ரேயாஸ் ஐயரை 26 கோடியே 75 லட்ச ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியானது விலைக்கு வாங்கி அவர்களது கேப்டனாகவும் நியமித்துள்ளது. எதிர்வரும் இந்த 2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அவரது தலைமையிலேயே பஞ்சாப் அணி விளையாட இருக்கிறது.

இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் தலைமை பயிற்சியாளர் பாண்டிங் ஆகியோர் அந்த அணியின் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு செய்தியாளர் சந்திப்பில் நேற்று கலந்து கொண்டனர். அந்த சந்திப்பில் தான் இந்த ஐபிஎல் தொடரில் எந்த இடத்தில் விளையாட விருப்பப்படுகிறேன்? என்பது குறித்த வெளிப்படையான சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

ஐபிஎல் தொடரில் ஏதாவது ஒரு இடத்தில் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினால் நான் மூன்றாவது இடத்தில் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் டாப் ஆர்டரில் என்னுடைய இயல்பான ஆட்டம் வெளிவருவதோடு பெரிய அளவில் ரன்களையும் குவிக்க முடியும். அதன் காரணமாகவே நான் அந்த இடத்தில் களமிறங்க கவனம் செலுத்தி வருகிறேன். இந்த முறை என்னை அங்கீகரிக்கும் வகையில் நான் அந்த இடத்தில் மிகச் சிறப்பாக செயல்படுவேன் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க : விராட் கோலியின் வேண்டுகோளை ஏற்று தங்களது கடுமையான ரூல்ஸை தளர்த்தும் பி.சி.சி.ஐ – விவரம் இதோ

பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குடன் ஏற்கனவே நான் மூன்று ஆண்டுகள் பயணித்துள்ளேன். மைதானத்தில் உள்ளேயும் சரி, வெளியேயும் சரி அவர் வீரர்களை மிகச்சிறப்பாக ஆதரிக்க கூடியவர். இம்முறை நிச்சயம் அவரது பயிற்சியின் கீழ் எங்களது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிவரை பயணிப்போம். இந்த தொடரின் முடிவில் கோப்பையை வெல்வது தான் முக்கியம் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement