- Advertisement -
ஐ.பி.எல்

அந்த டீம் தான் ஸ்பெஷல்.. மும்பை, சென்னை அணிகளில் தமக்கு பிடித்தது பற்றி பேசிய அம்பத்தி ராயுடு

நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு சர்வதேச அளவில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி இந்த வருடத்துடன் ஓய்வு பெற்றார். கடந்த 2010ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விக்கெட் கீப்பராக அறிமுகமான அவர் 2013, 2015, 2017 ஆகிய வருடங்களில் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

அதற்கிடையே இந்தியாவுக்காக அறிமுகமாகி சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்ட அவர் 2018இல் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட தேர்வானார். அந்த சீசனில் 500+ ரன்களை குவித்து சென்னை 3வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுத்து மிகச் சிறப்பாக விளையாடினார்.

- Advertisement -

பிடித்த அணி:
அதனால் 2019 உலகக் கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரை கடைசி நேரத்தில் கழற்றி விட்ட தேர்வுக்குழு விஜய் சங்கரை தேர்வு செய்தது. அதன் காரணமாக மனமுடைந்த ராயுடு 33 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்த போதிலும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி 2021, 2023 சீசன்களில் கோப்பை வென்ற சென்னை அணியில் முக்கிய அங்கமாக இருந்தார்.

அந்த வகையில் மொத்தம் 6 கோப்பைகளை வென்றுள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற வீரர் என்ற ரோஹித் சர்மாவின் ஆல் டைம் சாதனையை சமன் செய்து இந்த வருடத்துடன் கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார். அப்படி ஐபிஎல் ஜாம்பவானாக ஓய்வு பெற்ற அவரது கையால் 2023 வெற்றிக் கோப்பையை தோனி வாங்க வைத்து அழகு பார்த்தது ரசிகர்களால் மறக்க முடியாத காரணமாக அமைந்தது.

- Advertisement -

இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றின் 2 வெற்றிகரமான அணிகளில் விளையாடியுள்ள தமக்கு மும்பையை விட சென்னை சற்று அதிக ஸ்பெசலாக இருந்ததாக ராயுடு தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “எந்த அணியாக இருந்தாலும் அதில் என்னை வளைவுத்தன்மையுடன் வைத்துக்கொண்டது எனக்கு நினைவிருக்கிறது. என்னுடைய ஐபிஎல் கேரியரை மும்பை அணியில் துவங்கினேன்”

இதையும் படிங்க: 2வது டி20 நடைபெறும் க்ரீன்ஃபீல்ட் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

“அந்த அணியில் 8 வருடங்கள் விளையாடியது மகத்தான பயணமாக இருந்தது. அதில் நாங்கள் 3 ஐபிஎல் மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளை வென்றோம். அதன் பின் சிஎஸ்கே அணிக்கு சென்றது அதை விட ஸ்பெஷலாக இருந்தது. ஆனால் திடீரென்று மஞ்சள் உடையை அணிந்து கொண்டு மும்பைக்கு எதிராக விளையாடியது வேடிக்கையாக இருந்தது. அப்போதெல்லாம் மும்பை அணியில் சென்னைக்கு எதிராக இருந்த தருணங்களே என்னுடைய மனதிற்குள் ஓடியது. இருப்பினும் விரைவிலேயே சிஎஸ்கே அணியில் இருந்து நன்றாக பழகி விட்டேன்” என்று கூறினார்.

- Advertisement -