சேப்பாக்கத்தில் தோல்வியை சந்தித்ததோடு புள்ளி பட்டியலிலும் பின்னடைவை சந்தித்த சி.எஸ்.கே – எத்தனையாவது இடம்?

CSK
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய லக்னோ அணியானது ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அசத்தியது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் வடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்தது.

- Advertisement -

சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 108 ரன்களையும், ஷிவம் துபே 66 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் லக்னோ அணி சார்பாக மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 124 ரன்களையும், நிக்கோலஸ் பூரான் 34 ரன்களையும் குவித்தனர். நடப்பு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு சேப்பாக்கம் மைதானத்தில் தொடர் வெற்றிகளை குவித்து வந்தது.

- Advertisement -

இவ்வேளையில் நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியின் மூலம் முதல் தோல்வியை சந்தித்துள்ளது. அதோடு இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் நான்கு வெற்றி மற்றும் நான்கு தோல்விகளுடன் தற்போது புள்ளி பட்டியலிலும் ஐந்தாவது இடத்திற்கு சி.எஸ்.கே அணி சரிந்துள்ளது.

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் என்னை மாதிரி வரமுடியாது.. ஆனா அவருக்கு அந்த வாய்ப்பை கொடுங்க.. சேவாக் ஓப்பன்டாக்

அதேவேளையில் சி.எஸ்.கே அணியை வீழ்த்திய லக்னோ அணி தற்போது 8 போட்டிகளில் ஐந்து வெற்றிகள் உடன் 10 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement