IPL 2023 : ப்ளீஸ் சீக்கிரம் அவர கழற்றி விடுங்க, 2 மோசமான சாதனையால் மானத்தை வாங்கிய பவுலரை – விளாசும் சிஎஸ்கே ரசிகர்கள்

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கடந்த 2 மாதங்களாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வந்த ஐபிஎல் 2023 டி20 தொடரின் சாம்பியன் பட்டத்தை எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக வென்றது. அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற அணி என்ற மும்பையின் ஆல் டைம் சாதனையை சென்னை சமன் செய்ததால் அந்த அணி ரசிகர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக குஜராத்துக்கு எதிராக அதன் கோட்டையான அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் கடைசி பந்து வரை போராடிய சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அதிரடியாக செயல்பட்டு 20 ஓவர்களில் 214/4 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 96 (47) ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து மழையால் 15 ஓவரில் 171 என்ற புதிய இலக்கை துரத்திய சென்னைக்கு ருதுராஜ் கைக்வாட் 26 (16) ரன்களும் டேவோன் கான்வே 47 (25) ரன்களும் எடுக்க மிடில் ஆர்டரில் சிவம் துபே 32* (21) ரகானே 27 (13) ராயுடு 19 (8) என முக்கிய வீரர்கள் அதிரடியாக ரன்களை மோகித் சர்மா வீசிய கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்ஸரையும் பவுண்டரையும் பறக்க விட்டு ஜடேஜா சூப்பர் பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

ரன் மெஷின் பவுலர்:
அப்படி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு தகுந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியதாலயே சென்னை 5வது கோப்பையை வென்றுள்ளது. குறிப்பாக வேகப்பந்து வீச்சுத் துறையில் நட்சத்திர பவுலர்கள் இல்லாமலேயே ஆகாஷ் சிங், பதிரனா ஆகிய இளம் வீரருடன் பாதியில் இணைந்த தீபக் சஹர் கடைசி கட்ட போட்டிகளில் அசத்தலாக செயல்பட்டு வெற்றியில் பங்காற்றினார். ஆனால் சாம்பியன் பட்டம் என்ற சென்னை அணியின் குரூப்பில் டூப் என்று சொல்வதற்கு தகுந்தார் போல் துஷார் தேஷ்பாண்டே மட்டும் மோசமாக செயல்பட்டது அந்த அணி ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது.

முகேஷ் சவுத்ரி காயமானதால் வேறு வழியின்றி ஆரம்ப கட்ட போட்டிகளில் இம்பேக்ட் வீரராக விளையாடிய அவர் எதிரணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தி சென்னையின் வெற்றியை தாரை வார்த்ததை யாராலும் மறக்க முடியாது. இருப்பினும் தோனியின் தொடர்ச்சியான ஆதரவால் 16 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை எடுத்த அவர் ஊதா தொப்பி பட்டியலில் சென்னை அணி சார்பில் 5வது இடத்தில் பெருமை சேர்க்கிறார். ஆனால் அந்த பட்டியலில் இருக்கும் அனைவருமே 8.50க்கும் குறைவான எக்கனாமியில் ரன்களை கொடுத்த நிலையில் இவர் மட்டும் 9.92 என்ற மோசமான எக்கனாமியில் ரன்களை வள்ளலாக வாரி வழங்கியுள்ளார்.

- Advertisement -

சொல்லப்போனல் இந்த வருடம் 16 போட்டிகளில் 56.5 ஓவர்களை வீசிய அவர் 21 விக்கெட்டுகளை எடுத்தாலும் 564 ரன்களை கொடுத்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக ரன்களை வாரி வழங்கிய பவுலர் என்ற மோசமான சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. துசார் தேஷ்பாண்டே : 564 (2023)
2. ரசித் கான் : 562 (2023)
3. பிரசித் கிருஷ்ணா : 551 (2022)

அதை விட குஜராத்துக்கு எதிரானதாக நடைபெற்ற முக்கியமான ஃபைனலில் வள்ளலாக மாறிய அவர் 4 ஓவரில் விக்கெட் எதுவும் எடுக்காமல் அரை சதமடித்து 56 ரன்களை வாரி வழங்கினார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஃபைனலில் 50க்கும் மேற்பட்ட ரன்களை வழங்கிய முதல் சென்னை வீரர் என்ற மோசமான சாதனையும் அவர் படைத்துள்ளார். வரலாற்றில் இதுவரை 10 ஃபைனல்களில் சென்னை விளையாடியுள்ளதை அனைவரும் அறிவோம்.

- Advertisement -

ஆனால் இதற்கு முன் விளையாடிய 9 ஃபைனல்களில் வேறு எந்த பவுலருமே கொடுக்காத 50 ரன்களை முதல் முறையாக வாரி வழங்கியுள்ளார் சென்னையின் மானம் பறக்கும் அளவுக்கு செயல்பட்டுள்ளார். ஆந்த பட்டியல்:
1. ஷேன் வாட்சன் (பெங்களூரு) : 61, ஹைதராபாத்துக்கு எதிராக, 2016
2. துஷார் தேஷ்பாண்டே (சென்னை) : 52, குஜராத்துக்கு எதிராக, 2023*
3. லாக்கி பெர்குசன் (கொல்கத்தா) : 52, சென்னைக்கு எதிராக, 2021

இதையும் படிங்க: கண்ணீருடன் ஐ.பி.எல் தொடரில் இருந்து விடைபெற்ற அம்பத்தி ராயுடுவை கவுரவித்த தல தோனி – நெகிழவைத்த சம்பவம்

அதனால் ஏமாற்றமடையும் சென்னை ரசிகர்கள் அடுத்த வருடம் கோப்பையை தக்க வைக்க வேண்டுமெனில் முதலில் இவரை கழற்றி விடுமாறு கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement