கண்ணீருடன் ஐ.பி.எல் தொடரில் இருந்து விடைபெற்ற அம்பத்தி ராயுடுவை கவுரவித்த தல தோனி – நெகிழவைத்த சம்பவம்

Rayudu-and-Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வேளையில் தொடர்ந்து ஐ.பி.எல் போட்டிகளில் மட்டும் பங்கேற்று விளையாடி வந்தார். 37 வயதான ராயுடு இந்த 16-ஆவது ஐ.பி.எல் தொடர் துவங்கும் முன்னரே ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விடைபெறலாம் என்றே நினைத்திருந்தார். ஆனால் தோனியின் தனிப்பட்ட வேண்டுகோள் காரணமாக இந்த 16-ஆவது ஐ.பி.எல் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்தார்.

Rayudu

- Advertisement -

இந்நிலையில் அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்த இறுதிப்போட்டியுடன் தான் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் அறிவித்திருந்தார். அதன் காரணமாக அவர் கோப்பையை வெற்றி பெற்று சாம்பியனாகவே ரிட்டயர்டு ஆக வேண்டும் என்று ரசிகர்களும் பிராத்தித்து வந்தனர்.

இந்நிலையில் குஜராத் அணிக்கு எதிராக கடைசி போட்டியில் விளையாடிய அவர் 15 ஓவர்களில் 171 ரன்களை சேசிங் செய்யவேண்டும் என்ற நிலையில் முக்கியமான நேரத்தில் களமிறங்கி தான் சந்தித்த 8 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 19 ரன்கள் அடித்து வெற்றிக்கான முமென்ட்டத்தை வழங்கிய பின்னர் ஆட்டமிழந்து வெளியேறினார்.

Rayudu 1

இந்நிலையில் நேற்றைய போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றியை பெற்ற சென்னை அணியானது 5 ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இப்படி சென்னை அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றதும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மற்றும் வீரர்கள் ஆகியோர் மகிழ்ச்சியில் திளைத்தனர். அதேவேளையில் அணியின் அனுபவ வீரர்களான தோனி, ராயுடு ஆகியோர் வெற்றியை நினைத்து கண் கலங்கினர்.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் போது கடைசி போட்டியில் விளையாடி விடைபெறும் ராயுடுவை கவுரவிக்க தோனி செய்த செயல் தற்போது இணையத்தில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றைய போட்டிக்கு பின்னர் வெற்றிக்கான கோப்பையை முக்கிய நிர்வாகிகள் வழங்கும் போது அதனை ராயுடு பெற்றுக்கொள்ளுமாறு தோனி வேண்டுகோள் வைத்தார். அதனைத்தொடர்ந்து ராயுடு நடுவில் நின்று கைப்பையை கையில் ஏந்தினார். கோப்பையின் இருபுறங்களிலும் தோனி மற்றும் ஜடேஜா ஆகியோரும் உடனிருந்தனர்.

இதையும் படிங்க : வீடியோ : ரஷீத் கானையே மிரளவிட்ட சிவம் துப – ஷேன் வாட்சனின் ஆல் டைம் சாதனையை சமன் செய்து அசத்தல் – விவரம் இதோ

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரை 6 ஆண்டுகளாக சென்னை அணிக்காக விளையாடி வந்த ராயுடு 3 முறை சி.எஸ்.கே அணி வெற்றி பெற்ற போது அணியில் இருந்துள்ளார். எனவே அவரை கவுரவிக்கும் விதமாக தோனி அவரை கோப்பையை ஏந்த வைத்தது பார்ப்பவர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement