அப்டினா தல தோனிக்கு அப்றம் அவர் தான் கேப்டன்ன்னு சொல்லுங்க, உறுதியான முடிவால் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம் – காரணம் இதோ

MS Dhoni CSK Ruturaj
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. இருப்பினும் அதே சமயத்தில் வரும் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 8 வரை சீனாவில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. 2014க்குப்பின் முதல் முறையாக டி20 வடிவமாக அத்தொடரில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணி உலகக் கோப்பைக்கு தயாராக வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதன் காரணமாக அத்தொடரில் ருதுராஜ் கைக்வாட் தலைமையில் முழுவதுமாக இளம் வீரர்களைக் அறிவித்துள்ள பிசிசிஐ அதற்கான முழு பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

அதில் இந்த வருட ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் வாய்ப்பு பெறாத ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ஆகியோர் முதல் முறையாக தேர்வாகியுள்ள நிலையில் திலக் வர்மா, ஜெய்ஸ்வால் போன்ற ஏற்கனவே தேர்வாகியுள்ள வீரர்களும் இடம் பிடித்துள்ளனர். மேலும் சென்னை அணியில் அசத்திய சிவம் துபே நீண்ட நாட்கள் கழித்து கம்பேக் கொடுத்துள்ள நிலையில் தமிழகத்திலிருந்து வாஷிங்டன் சுந்தர் நேரடி அணியிலும் சாய் சுதர்சன் மற்றும் சாய் கிஷோர் ஆகியோரின் ஸ்டான்ட் பை வீரர்களாகவும் தேர்வாகியுள்ளனர்.

- Advertisement -

சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி:
மகாராஷ்டிராவை சேர்ந்த ருதுராஜ் கடந்த 2016 முதல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தற்போது தம்முடைய மாநில அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அந்த பதவியில் கடந்த சில வருடங்களாகவே விஜய் ஹசாரே கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கடந்த வருடம் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்த அவர் 2020இல் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் அறிமுகமானார்.

அந்த சீசனில் வரலாற்றில் முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறிய அவமானத்தை சந்தித்த சென்னையை கடைசி கட்ட போட்டிகளில் அதிரடியாக விளையாடி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்கும் அவமானத்திலிருந்து காப்பாற்றிய ருதுராஜ் 2021 சீசனில் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று 4வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதனால் இந்தியாவுக்காகவும் அறிமுகமாகி தடுமாறியதை போல கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்ட அவர் இந்த சீசனில் மீண்டும் 590 ரன்கள் விளாசி சென்னை 5வது கோப்பையை வெல்ல உதவினார்.

- Advertisement -

மறுபுறம் ஐபிஎல் துவங்கப்பட்ட 2008 முதல் இந்தியாவைப் போலவே மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் ஃபினிஷராகவும் செயல்பட்டு மகத்தான கேப்டன்ஷிப் செய்த எம்எஸ் தோனி 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ள போதிலும் தற்போது 42 வயதை தொட்டுள்ளார். சொல்லப்போனால் கடந்த வருடம் வருங்கால கேப்டனை வளர்ப்பதற்காக கேப்டன்ஷிப் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்த அவர் சாதாரண வீரராக விளையாடினார்.

ஆனால் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத காரணத்தால் தடுமாறிய ரவீந்திர ஜடேஜா பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் மொத்தமாக சொதப்பி தோல்விகளுக்கு காரணமாக அமைந்தார். அதனால் வம்பே வேண்டாம் என்று மீண்டும் கேப்டன்ஷிப் பொறுப்பை அவர் தோனியிடம் ஒப்படைத்த நிலையில் உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டராகவும் இங்கிலாந்தின் கேப்டனாகவும் செயல்பட்ட அனுபவத்தைக் கொண்ட பென் ஸ்டோக்ஸ் இந்த வருடம் சென்னைக்கு ஒப்பந்தமானார்.

- Advertisement -

எனவே தோனிக்கு பின் சென்னையின் கேப்டனாக செயல்பட அவர் தகுதியாக இருப்பார் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் ஆரம்பத்திலேயே முழுமையாக விளையாட மாட்டேன் என்று தெரிவித்த அவர் 2 போட்டியில் மட்டுமே விளையாடி காயமடைந்து ஏமாற்றத்தை கொடுத்தார். அதே போல் இந்த சீசனில் அசத்திய ரகானேவும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து அசத்தக்கூடியவர் கிடையாது என்பதுடன் 34 வயதை தாண்டி விட்டார்.

இதையும் படிங்க:IND vs WI : ஜெய்ஸ்வால் அட்டகாசம், ருதுராஜ் ஓகே ஆனா அவர் செலக்ட் ஆகாதாது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு – பாண்டிங் ஏமாற்ற பேட்டி

அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு எப்படி கணக்கு போட்டாலும் 2007இல் 26வயதில் இந்தியாவின் கேப்டனாக அறிமுகமான தோனியை போலவே தற்போது 26 வயதில் இந்திய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ருதுராஜ் அடுத்ததாக சென்னையை வழி நடத்துவதற்கு தகுதியானவர் என அந்த அணி ரசிகர்கள் ட்விட்டரில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த ஆசிய விளையாட்டுத் தொடரில் அவர் கேப்டனாக சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் வருங்காலத்தில் சென்னை அணியையும் வழி நடத்துவதற்கான வாய்ப்பை பெறுவார் என்று உறுதியாக சொல்லலாம்.

Advertisement