IND vs WI : ஜெய்ஸ்வால் அட்டகாசம், ருதுராஜ் ஓகே ஆனா அவர் செலக்ட் ஆகாதாது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு – பாண்டிங் ஏமாற்ற பேட்டி

RIcky Ponting
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பயணத்தை வெற்றியுடன் துவக்கி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. முன்னதாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்ததால் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த தொடரில் பேட்டிங் துறையில் புஜாரா மட்டும் கழற்றி விடப்பட்டு ருதுராஜ் கைக்வாட், யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

Ruturaj Gaikwad Jaiswal

- Advertisement -

அதில் ருதுராஜை (42) விட உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் அதிக சராசரியில் (81) ரன்களை குவித்து ஐபிஎல் 2023 தொடரில் 625 ரன்கள் விளாசி அதிவேக அரை சதமடித்த வீரராக ஆல் டைம் சாதனை படைத்த காரணத்தால் யசஸ்வி ஜெய்ஸ்வால் இந்த போட்டியில் வாய்ப்பு பெற்றார். அந்த வாய்ப்பில் முதல் பந்திலேயே பவுண்டரியுடன் தம்முடைய கேரியரை அட்டகாசமாக துவக்கிய அவர் நங்கூரமாக நின்று 171 ரன்கள் குவித்து அறிமுகப் போட்டியிலேயே சதமடித்த 17வது இந்திய வீரர் போன்ற ஏராளமான சாதனைகளை படைத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தியுள்ளார்.

பாண்டிங் ஏமாற்றம்:
இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய ஜெய்ஸ்வால், ருதுராஜ் ஆகியோர் இந்த தொடரில் வாய்ப்பு பெற்று அசத்தியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கும் முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வரும் சர்ப்ராஸ் கானுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது தமக்கு ஏமாற்றமளிப்பதாக கூறியுள்ளார். முன்னதாக அந்த இருவரை விட கடந்த 3 வருடங்களாக ரஞ்சி கோப்பையில் 80 என்ற சராசரியில் சிறப்பாக செயல்பட்டு வரும் சர்பராஸ் கான் இந்தியாவுக்காக விளையாட போராடி வருகிறார்.

Sarfaraz-Khan

இருப்பினும் சர்வதேச தரத்துக்கு நிகரான ஃபிட்னஸ் கடைபிடிக்காத காரணத்தாலும் வாய்ப்பு கொடுக்காத தேர்வு குழுவை மிரட்டும் வகையில் கொண்டாடி நன்னடத்தையின்றி நடந்து கொண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தாலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று செய்திகள் வெளியானது. அத்துடன் தரமற்ற பவுலிங்கை கொண்ட ரஞ்சிக் கோப்பையில் அசத்தும் அவர் ஜெயஸ்வால், ருதுராஜ் ஆகியோரைப் போல ஐபிஎல் தொடரில் தரமான வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள தடுமாறாவதாலேயே வாய்ப்பு பெறவில்லை என்றும் தெரிய வந்தது.

- Advertisement -

ஆனாலும் உள்ளூர் தொடருக்கு மதிப்பளித்து சர்பராஸ் கான் வாய்ப்பு பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் ரிக்கி பாண்டிங் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வால் முற்றிலும் ஸ்பெஷலாக செயல்பட்டார். குறிப்பாக ஒரு சாவியை சரியான நேரத்தில் கச்சிதமாகத் திறந்து ஒரே நாளில் அவர் சூப்பர் ஸ்டாராக மாறிவிட்டார். அவர் மிகவும் திறமைமிக்க இளம் வீரர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக இந்த வருட ஐபிஎல் தொடரில் அவருடைய திறமைகளை நான் நேரடியாகவே பார்த்தேன்”

Ricky-Ponting

“அவரைப் போலவே உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிறைய இந்திய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துவதை நான் பார்க்க காத்திருக்கிறேன். ஏனெனில் உள்ளூர் கிரிக்கெட்டில் அவர்களுடைய சாதனைகள் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அதன் அடிப்படையில் பார்க்கும் போது ஜெயஸ்வால் மற்றும் ருதுராஜ் ஆகிய இருவருமே ஒரே மாதிரியான திறமை கொண்டவர்கள். அதில் ருதுராஜ் அடுத்த சில வருடங்களில் சிறப்பான டெஸ்ட் வீரராக உருவெடுப்பார் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க:IND vs WI : சயீத் அஜ்மலை மிஞ்சி 12 வருட உலக சாதனை படைத்த அஸ்வின் – ஹர்பஜனை மிஞ்சி வெ.இ மண்ணில் 3 வரலாற்று சாதனை

“ஆனால் இந்த சமயத்தில் சர்ப்ராஸ் கானுக்காக நான் சற்று வருந்துகிறேன். ஏனெனில் முதல் தர கிரிக்கெட்டில் 80க்கும் மேலான பேட்டிங் சராசரியை கொண்டிருந்தும் அவர் டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பை பெறவில்லை. இருப்பினும் சில காரணங்களுக்காக அவருக்கு பதிலாக இந்த இளம் வீரர்களை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று நினைக்கிறேன்” என கூறினார்.

Advertisement