IND vs WI : சயீத் அஜ்மலை மிஞ்சி 12 வருட உலக சாதனை படைத்த அஸ்வின் – ஹர்பஜனை மிஞ்சி வெ.இ மண்ணில் 3 வரலாற்று சாதனை

Ashwin 12
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஜூலை 12ஆம் தேதி டாமினிக்கா நகரில் துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்து வெறும் 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அலிக் அதனேஷ் 47 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும் ரவிந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

IND vs WI

- Advertisement -

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே 229 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிக ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடியாக சாதனை படைத்த ரோகித் சர்மா சதமடித்து 103 ரன்களும் அறிமுகப் போட்டியில் அட்டகாசமாக செயல்பட்ட ஜெய்ஸ்வால் ஏராளமான சாதனைகளை படைத்து 171 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து விராட் கோலி 76 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 37* ரன்களும் எடுத்த போது 421/5 ரன்களில் இந்தியா தங்களுடைய இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

அஸ்வின் சாதனைகள்:
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கிமர் ரோச், அல்சாரி ஜோசப், கார்ன்வால், வேரிக்கன், அதனேஷ் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 271 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் இந்தியாவின் துல்லியமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் முன்பை விட மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 130 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அலிக் அதனேஷ் 28 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்களையும் சாய்த்தனர்.

Ashwin

அதனால் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய 1 – 0* (2) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த வெற்றிக்கு 177 ரன்கள் எடுத்த ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது வென்றாலும் மொத்தமாக 12 விக்கெட்டுகளை சாய்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் வெஸ்ட் இண்டீஸை 3 நாட்களில் சுருட்டுவதற்கு முக்கிய பங்காற்றினார் என்று சொல்லலாம். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்த அவர் 700 சர்வதேச விக்கெட்டுகளை அதிவேகமாக எடுத்த இந்திய வீரர் உட்பட நிறைய சாதனைகளையும் படைத்தார்.

- Advertisement -

1. அந்த நிலையில் மொத்தமாக 2 இன்னிங்ஸிலும் சேர்த்து 156 ரன்கள் கொடுத்து 12 விக்கெட் அவர் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த சுழல் பந்து வீச்சாளர் என்ற பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மல் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) : 12/156 – வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, 2023*
2. சயீத் அஜ்மல் (பாகிஸ்தான்) : 11/111 – வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, 2011
3. வில்ஃப் பெர்குசன் (வெஸ்ட் இண்டீஸ்) : 11/229 – இங்கிலாந்துக்கு எதிராக, 1948

2. மேலும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒரு போட்டியில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் என்ற வரலாற்றையும் அஸ்வின் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரவிச்சந்திரன் அஸ்வின் : 12/156, 2023*
2. இசாந்த் சர்மா : 10/108, 2011
3. இசாந்த் சர்மா : 8/74, 2019

- Advertisement -

3. அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிக முறை 5 விக்கெட்களை எடுத்த இந்திய பந்து வீச்சாளர் என்று சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரவிச்சந்திரன் அஸ்வின் : 5*
2. ஹர்பஜன் சிங்/அனில் கும்ப்ளே/இஷாந்த் சர்மா/சுபாஷ் குப்தே : தலா 4

Ashwin-and-Kumble

4. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒரு போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் பவுலர் என்ற சாதனையும் அஸ்வின் படைத்துள்ளார். இதற்கு முன் ஹர்பஜன் போன்றவர்கள் ஒரு இன்னிங்சில் மட்டுமே 5 விக்கெட் ஹால் எடுத்திருந்தனர்.

இதையும் படிங்க:வீடியோ : எப்டி இருந்த கிங் கோலி இப்டி ஆகிட்டாரே, அதிர்ஷ்டம் கிடைச்சும் மெகா திணறல் – இதை பாத்தீங்களா?

5. அவை அனைத்தையும் விட சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்த 2வது இந்திய வீரர் மற்றும் ஆஃப் ஸ்பின்னர் என்ற ஹர்பஜன் சிங் ஆல் டைம் சாதனையும் அவர் உடைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. அனில் கும்ப்ளே : 956
2. ரவிச்சந்திரன் அஸ்வின் : 709*
3. ஹர்பஜன் சிங் : 707

Advertisement