எப்டி இருந்த கிங் கோலி இப்டி ஆகிட்டாரே, அதிர்ஷ்டம் கிடைச்சும் மெகா திணறல் – இதை பாத்தீங்களா?

Virat kohli 76
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்ற இந்தியா 1 – 0* (2) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. டாமினிக்கா மைதானத்தில் கடந்த ஜூலை 12ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அறிமுக போட்டியில் விளையாடிய அலிக் அதனேஷ் 47 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 229 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிக ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடியாக சாதனை படைத்த கேப்டன் ரோகித் சர்மா சதமடித்து 103 ரன்களும் அறிமுக போட்டியில் அசத்திய ஜெய்ஸ்வால் சதமடித்து 171 ரன்களும் எடுத்தனர். அவர்களுடன் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 76 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 37* ரன்களும் எடுத்ததால் 421/5 ரன்களில் இந்தியா தங்களுடைய இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கிமர் ரோச், அல்சாரி ஜோசப், ரஹீம் கார்ன்வால், ஜோமேல் வேரிக்கன், அலிக் அதனேஷ் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

- Advertisement -

பரிதாப கிங் கோலி:
அதைத்தொடர்ந்து 271 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் முன்பை விட சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 130 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அலிக் அதனேஷ் 28 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக மீண்டும் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதனால் பெரிய வெற்றியை பெற்ற இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

முன்னதாக இப்போட்டியில் ஜெய்ஸ்வால் – ரோஹித் போல அடுத்ததாக வந்த விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 2019க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறி வந்த கதைக்கு கடந்த 2022 ஆசிய கோப்பையில் முற்றுப்புள்ளி வைத்து கடந்த 6 மாதங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதங்களை அடித்த அவர் ஐபிஎல் 2023 தொடரிலும் பெங்களூரு அணியில் மிகச் சிறப்பாகவே செயல்பட்டார். குறிப்பாக அதே ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனை படைத்த ரோகித்தை விட அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

அப்படிப்பட்ட அவர் இந்த தொடரில் சுமாரான பவுலிங்கை கொண்ட வெஸ்ட் இண்டீஸை எளிதாக அடித்து நொறுக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்பம் முதலே திண்டாடிய அவர் 79 பந்துகள் வரை சிங்கிள் மட்டுமே எடுத்து தடுமாற்றமாக செயல்பட்டு ஒரு வழியாக 80வது பந்தில் பவுண்டரி அடித்து அதை சதமடித்தது போல் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதற்கிடையே 40 ரன்கள் எடுத்திருந்த போதே கொடுத்த கேட்ச்சை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கோட்டை விட்டதால் தப்பி தொடர்ந்து விளையாடிய அவர் மீண்டும் பவுண்டரி அடிக்க முடியாமல் தடுமாறினார்.

அந்த வகையில் கடுமையாக போராடிய அவர் ஒரு வழியாக 123வது பந்தில் 2வது பவுண்டரியை அடித்த நிலையில் அதன் பின் மீண்டும் அடுத்த 40 பந்துகள் வரை சிங்கிள் மட்டுமே எடுத்து சுதந்திரமாக விளையாட முடியாமல் திண்டாடினார். அதைத்தொடர்ந்து 163வது பந்தில் 3வது பவுண்டரியை அடித்த அவர் “எப்பா ஒரு வழியா அடிச்சிட்டேன்” என்று வானத்தை நோக்கி கொண்டாடியது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

இதையும் படிங்க:இந்திய அணியில் முடிவுக்கு வந்த ஷிகார் தவானின் கதை. இனிமே சேன்ஸ் கிடைக்க வாய்ப்பே இல்லை – பி.சி.சி.ஐ எடுத்த முடிவு

ஆனால் அதற்கிடையேயும் 72 ரன்களில் கொடுத்த கேட்ச்சை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தவற விட்டதால் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் அந்த 2 அதிர்ஷ்டத்தையும் கோட்டை விட்டு 76 (182) ரன்களில் அவுட்டாகி வழக்கம் போல ஏமாற்றத்துடன் சென்றார். அந்த வகையில் ஒரு காலத்தில் அதிக பவுண்டரிகளை அடித்து சதங்களை தொடக்கூடிய அவர் இப்போட்டியில் ஒரு பவுண்டரி அடிப்பதற்கே திண்டாடி 2 அதிர்ஷ்டத்தை பயன்படுத்தாமல் சதத்தை கோட்டை விட்டதை பார்க்கும் ரசிகர்கள் “எப்படி இருந்த கிங் கோலி இப்படி ஆகிவிட்டாரே” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement