இந்திய அணியில் முடிவுக்கு வந்த ஷிகார் தவானின் கதை. இனிமே சேன்ஸ் கிடைக்க வாய்ப்பே இல்லை – பி.சி.சி.ஐ எடுத்த முடிவு

Shikhar-Dhawan
- Advertisement -

இந்திய அணியின் அனுபவ வீரரான ஷிகர் தவான் கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 167 ஒருநாள் போட்டிகள், 34 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். தற்போது 37 வயதான வீரரான இவருக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்கிற செய்தி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Virat Kohli Shikhar Dhawan

- Advertisement -

ஏனெனில் இந்திய அணியின் அனுபவ வீரராக பார்க்கப்படும் ஷிகர் தவான் கடந்த 2018-ஆம் ஆண்டிற்கு பிறகு டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படுவதில்லை. அதே போன்று கடந்த 2021-ஆம் ஆண்டிற்கு பிறகு அவர் டி20 அணியிலும் தேர்வு செய்யப்படுவதில்லை.

இளம் வீரர்களின் வருகை காரணமாக டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணிகளில் தனது இடத்தினை இழந்தாலும் ஒருநாள் போட்டிகளில் அவ்வப்போது உள்ளேயும், வெளியேயும் ஷிகர் தவான் இந்திய அணியுடன் பயணித்து வந்தார். ஆனால் இனிமேல் ஒருநாள் அணியிலும் அவரை முற்றிலுமாக பார்க்க முடியாது என்று கூறப்படுகிறது.

Shikhar-Dhawan

ஏனெனில் முதன்மை இந்திய அணி இடம்பிடிக்க பல இளம் வீரர்கள் போட்டி போட்டு வரும் வேளையில் இரண்டாம் தர இந்திய அணியை ஷிகர் தவான் வழிநடத்தி வந்தார். கடந்த ஆண்டு கூட இந்திய முதன்மை வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்தபோது தவான் தலைமையிலான இரண்டாம் தர இந்திய அணி இலங்கை சென்று விளையாடியது.

- Advertisement -

அதேபோன்று இந்த ஆண்டு சீனாவில் நடைபெற இருக்கும் ஏசியன் கேம்ஸ் தொடரில் பங்கேற்க இருக்கும் இரண்டாம் தர இந்திய அணிக்கு அவரே கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று வெளியானஏசியன் கேம்ஸ் தொடருக்கான இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் அவரது தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே அங்கு பயணிக்கிறது.

இதையும் படிங்க : வீடியோ : அறிமுக மேட்ச்லயே தடை வேணுமா – பொறுப்பற்ற இஷான் கிசானை விளாசும் ரசிகர்கள் – நடந்தது என்ன?

இந்த தொடரில் இருந்து ஷிகர் தவான் நீக்கப்பட்டுள்ளதால் இனி அவர் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் பிசிசிஐ அவரது கரியரை முடிவுக்கு கொண்டு வரவே இந்த தொடரில் அவரது கேப்டன் பதவியை பறித்தது மட்டுமின்றி அவருக்கு இடம் அளிக்காமல் விட்டுள்ளது. இதனால் வெகு விரைவில் ஷிகர் தவான் ஓய்வை அறிவிக்கவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement