அறிமுக மேட்ச்லயே தடை வேணுமா – பொறுப்பற்ற இஷான் கிசானை விளாசும் ரசிகர்கள் – நடந்தது என்ன?

Ishan Kishan
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பயணத்தை வெற்றியுடன் துவக்கி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து 1 – 0* (2) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. டாமினிக்கா நகரில் ஜூலை 12ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் வெறும் 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக இளம் வீரர் அலிக் அதனேஷ் 47 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிக ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் ரன்கள் அமைத்த இந்திய ஜோடி என்ற சாதனை படைத்த கேப்டன் ரோகித் சர்மா சதமடித்து 103 ரன்களும் அறிமுக போட்டியில் அட்டகாசமாக செயல்பட்ட ஜெய்ஸ்வால் சதமடித்து 171 ரன்களும் எடுத்தனர். அவர்களுடன் விராட் கோலி 76 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 37* ரன்களும் எடுத்ததால் 421/5 ரன்கள் குவித்து இந்தியா தங்களுடைய முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

இஷான் கிசான் சேட்டை:
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கிமர் ரோச், அல்சாரி ஜோசப், கார்ன்வால், வேரிக்கன், அதனேஷ் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 271 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் முன்பை விட சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 130 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அலிக் அதனேஷ் 28 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக மீண்டும் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அதனால் எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்த போட்டியில் பெரிய வெற்றியை சுவைத்த இந்தியாவுக்கு அறிமுக வீரராக களமிறங்கிய இசான் கிசான் கடைசி நேரத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது அதிரடியாக செயல்படாமல் 20வது பந்தில் சிங்கிள் எடுத்ததால் கடுப்பான ரோகித் சர்மா டிக்ளேர் செய்தார். அதை விட இந்த போட்டியில் 67/5 என வெஸ்ட் இண்டீஸ் தடுமாறிய போது நட்சத்திர வீரர் ஜேசன் ஹோல்டர் நங்கூரமாக நின்று தோல்வியை தவிர்க்க போராடினார். அப்போது ரவீந்திர ஜடேஜா வீசிய ஒரு பந்தை எதிர்கொண்ட அவர் அடிக்க முடியாமல் விட்டாலும் முழுவதுமாக வெள்ளை கோட்டுக்குள் நின்றார்.

- Advertisement -

மேலும் அந்தப் பந்தை பிடித்த இசான் கிசான் ஸ்டம்ப்பிங் செய்ய முடியாது என்பதை தெரிந்து வேறு பக்கம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். அந்த வகையில் பவுலர், பேட்ஸ்மேன், கீப்பர் என அனைவருமே அந்த பந்தை முழுவதுமாக எதிர்கொண்டு முடித்து விட்டதால் அது காலாவதியாகி விட்டது. ஆனால் அப்போது “சரி எல்லாம் முடிந்து விட்டதே” என்ற வகையில் ஜேசன் ஹோல்டர் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறிய நிலையில் வேண்டுமென்றே பந்தை கையில் வைத்திருந்த இசான் கிசான் ஸ்டம்ப்பில் அடித்து நடுவரிடம் ரன் அவுட் கேட்டார். அதைப் பார்த்த நடுவர் பந்து காலாவதியாகி விட்டதால் உங்களுடைய கோரிக்கையை ஏற்க முடியாது என்று அடுத்த நொடியே நிராகரித்தார்.

அந்த வகையில் அந்த சமயத்தில் அவர் வேண்டுமென்றே அப்படி நடந்தது இந்திய ரசிகர்களையே கடுப்பேற்றும் வகையில் அமைந்தது. சொல்லப்போனால் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவை சர்ச்சைக்குரிய முறையில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ரன் அப்படி அவுட் செய்தாலும் விழிப்புணர்வுடன் செயல்பட்டதற்காக பாராட்டுகளையும் வாங்கினார்.

இதையும் படிங்க:மீண்டும் வரும் சுதந்திர கோப்பை : தெ.ஆ மண்ணில் இந்தியாவுக்கு காத்திருக்கும் மெகா சவால் – அட்டவணை வெளியிட்ட பிசிசிஐ

ஆனால் இங்கே தம்முடைய அறிமுக போட்டியில் பேட்டிங்கில் அசத்தவில்லை என்றாலும் விக்கெட் கீப்பிங்கில் இப்படி செய்தால் பாராட்டு கிடைக்கும் என்று நினைத்தே இஷான் கிசான் அதை செய்தார் என்றே சொல்லலாம். ஆனாலும் அதில் நியாயமில்லாததால் அறிமுக போட்டியில் இந்த தேவையற்ற சேட்டையெல்லாம் தடையில் கொண்டு சென்று விடும் என்றும் ரசிகர்கள் அவரை விளாசுகின்றனர்.

Advertisement