மீண்டும் வரும் சுதந்திர கோப்பை : தெ.ஆ மண்ணில் இந்தியாவுக்கு காத்திருக்கும் மெகா சவால் – அட்டவணை வெளியிட்ட பிசிசிஐ

INDvsRSA
- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் வருகையால் மவுசு குறைந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை உயிர்ப்பிப்பதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனும் கோப்பையை ஐசிசி அறிமுகப்படுத்தியது. அதில் முதல் தொடரிலேயே சிறப்பாக செயல்பட்டு ஃபைனலுக்கு சென்ற இந்தியா 2019இல் விராட் கோலி தலைமையில் நியூசிலாந்திடம் தோற்ற நிலையில் 2வது தொடரில் அசத்திய போதிலும் மீண்டும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் கடந்த மாதம் ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவிடம் மண்ணை கவ்வியது.

ஆனாலும் சொந்த மண்ணில் இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற உலகின் பல அணிகள் ஃபைனல் வருவதற்கே திணறும் நிலையில் அடுத்தடுத்த ஃபைனலுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது. அதைத்தொடர்ந்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு ஹாட்ரிக் முறையாக தகுதி பெறுவதற்கான பயணத்தை தற்போது வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்தியா துவங்கியுள்ளது. இம்முறையும் இந்தியா வழக்கம் போல விளையாடும் 3 வெளிநாட்டு தொடர்களில் தற்போது முதலாவதாக வெஸ்ட் இண்டீஸ் தொடர் நடைபெறுகிறது.

- Advertisement -

சுதந்திர கோப்பை:
ஆனால் இந்தத் தொடரை விட வரும் டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்க மண்ணிலும் வரும் 2025 ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய மண்ணிலும் நடைபெறும் தொடர்கள் தான் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் ஆஸ்திரேலியாவை கூட ஏற்கனவே 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியா தென்னாபிரிக்காவில் மட்டும் கடந்த 1992 முதல் இதுவரை வெல்ல முடியாமல் திண்டாடி வருகிறது.

குறிப்பாக 2016 முதல் தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக வெற்றி நடை போட வைத்த விராட் கோலி தலைமையில் கடந்த 2020 டிசம்பரில் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியா விளையாடிய போது முதல் முறையாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியாவுக்கு 2வது போட்டியில் விராட் கோலி காயமடைந்ததால் கேஎல் ராகுல் தலைமையில் தோல்வியே கிடைத்தது.

- Advertisement -

அதைத்தொடர்ந்து நடைபெற்ற 3வது போட்டியிலும் இளம் வீரர்களை கொண்ட டீன் எல்கர் தலைமையிலான தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்த இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்று நம்பர் ஒன் இடத்தையும் பறிகொடுத்ததுடன் விராட் கோலியின் சர்ச்சைக்குரிய முறையில் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் காலம் காலமாக சவாலாக இருந்து வரும் தென்னாபிரிக்க மண்ணில் வெற்றி காண்பதற்காக மீண்டும் வரும் டிசம்பர் மாதம் இந்தியா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்க உள்ளது.

IND vs RSA

அந்த தொடருக்கு முன்பாக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களிலும் இந்தியா விளையாட உள்ளதாக தெரிவித்துள்ள பிசிசிஐ அதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட மகாத்மா காந்தி மற்றும் தென்னாப்பிரிக்காவின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட நெல்சன் மண்டேலா ஆகியோரை கௌரவிக்கும் வகையில் கடந்த 2019 முதல் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் காந்தி – மண்டேலா சுதந்திர கோப்பை என்றழைக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் சாதாரண போட்டி என்பதையும் தாண்டி இருநாட்டு தலைவர்களை பெருமைப்படுத்தும் இந்த தொடரில் விளையாடுவதை இந்தியா கௌரவமாக நினைப்பதாக கூறியுள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பெருமையுடன் இந்த சுற்றுப்பயணத்திற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளார். அந்த விவரம் இதோ (இந்திய நேரம்):
டிசம்பர் 10 இரவு 9.30 : முதல் டி20, டர்பன்
டிசம்பர் 12 இரவு 9.30 : 2வது டி20, கிப்ரியா
டிசம்பர் 14 இரவு 9.30 : 3வது டி20, ஜோகன்ஸ்பார்க்

இதையும் படிங்க:IND vs WI : இஷான் கிஷன் 1 ரன் அடிச்சதும் டிக்ளேர் செய்தது ஏன்? வெற்றிக்கு பின்னர் – விளக்கமளித்த கேப்டன் ரோஹித் சர்மா

டிசம்பர் 17 மதியம் 1.30 : முதல் ஒன்டே, ஜோகன்ஸ்பார்க்
டிசம்பர் 19, மாலை 4.30 : 2வது ஒன்டே, கிப்ரியா
டிசம்பர் 21, மாலை 4.30 : 3வது ஒன்டே, பார்ல்

டிசம்பர் 26 மதியம் 1.30 : முதல் டெஸ்ட், செஞ்சூரியன்
ஜனவரி 3 மதியம் 1.30 : 2வது டெஸ்ட், கேப் டவுன்

Advertisement