IND vs WI : இஷான் கிஷன் 1 ரன் அடிச்சதும் டிக்ளேர் செய்தது ஏன்? வெற்றிக்கு பின்னர் – விளக்கமளித்த கேப்டன் ரோஹித் சர்மா

Ishan-Kishan-and-Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது ஜூலை 12-ஆம் தேதி டோமினிக்கோ நகரில் துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும், விக்கெட் கீப்பராக இஷான் கிஷனும் அறிமுகமாகினர். அவர்களது இந்த முதல் போட்டியிலேயே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதால் அவர்களுக்கான வாய்ப்பு நீடிக்கும் என்றே தெரிகிறது.

Ishan Kishan

- Advertisement -

அதன்படி இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு சுருண்ட நிலையில் இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 421 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து 271 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 130 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததது.

அதன் காரணமாக இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி 405 ரன்கள் எடுத்திருந்தபோது விராட் கோலியின் விக்கெட்டை இழந்தது. அதனை தொடர்ந்து ஏழாவது வீரராக களமிறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் தனது முதல் ரன்னை எடுக்க இருவது பந்துகளை எடுத்துக் கொண்டார். 20-ஆவது பந்தை சந்தித்த அவர் ஒரு ரன் எடுத்து மறுபுறம் சென்றபோது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்து வீரர்களை ஓய்வறைக்கு அழைத்தார்.

Ishan Kishan 1

இந்நிலையில் இப்படி இஷான் கிஷன் ஒரு ரன் அடித்ததுமே டிக்ளேர் அறிவித்தது ஏன் என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா போட்டி முடிந்து அளித்த பேட்டியில் தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார். அந்த வகையில் ரோகித் சர்மா கூறுகையில் :\

- Advertisement -

நாங்கள் ஒவ்வொரு ஓவரின் இடைவெளியின் போதும் டிக்ளரேஷன் குறித்த தெளிவான தகவலை மைதானத்தில் இருந்த வீரர்களுக்கு தெரிவித்தபடி தான் இருந்தோம். இருந்தாலும் இஷான் கிஷன் ஒரு ரன்னை எடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். ஏனெனில் பேட்டிங் செய்ய மைதானத்தில் களமிறங்கிய அவர் ஒரு ரன் எடுக்காமல் டிக்ளேர் செய்தால் அது அழகல்ல.

இதையும் படிங்க : கம்பீருடன் இவர் தான் செயல்பட போறாரா? டி20 உலக கோப்பை வென்ற ஆஸி ஜாம்பவானை புதிய பயிற்சியாளராக நியமித்த லக்னோ

எனவே முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ள அவர் பேட்டிங்கிற்கு வந்து ஒரு ரன்னாவது எடுக்க வேண்டும் என்று விரும்பினேன். அதோடு இஷான் கிஷனும் எப்போதுமே தன்னுடைய பேட்டிங்கில் ஆர்வமாக இருக்கிறார். அதன் காரணமாகவே அவரை ஒரு ரன் அடிக்கவிட்டு அதன் பிறகு டிக்ளேர் செய்வதாக அறிவித்தேன் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement