கம்பீருடன் இவர் தான் செயல்பட போறாரா? டி20 உலக கோப்பை வென்ற ஆஸி ஜாம்பவானை புதிய பயிற்சியாளராக நியமித்த லக்னோ

Gautam Gambhir IPL
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்ற ஐபிஎல் 2023 டி20 தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் சாதனை சமன் செய்தது. அந்த வகையில் 2 மாதங்களாக நடைபெற்ற அந்த தொடரில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு பிளே ஆப் சுற்றுக்கு வந்த போதிலும் சென்னையில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மும்பைக்கு எதிராக தோல்வி சந்தித்து வெளியேறியது.

இருப்பினும் கடந்த வருடம் தோற்றுவிக்கப்பட்ட அந்த அணி இம்முறை கேப்டன் கேஎல் ராகுல் காயத்தால் வெளியேறிய போதும் அடுத்தடுத்த சீசன்களில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது என்றே சொல்லலாம். இந்நிலையில் கடந்த வருடம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட போது லக்னோ நிர்வாகம் தங்களுடைய தலைமைப் பயிற்சியாளராக ஜிம்பாப்வே முன்னாள் ஜாம்பவான் வீரர் ஆண்டி ஃபிளவரை நியமித்திருந்தது.

- Advertisement -

சிறப்பான லேங்கர்:
இருப்பினும் 2 ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்ட அந்த நியமனம் முடிவுக்கு வந்ததால் தற்போது ஆண்ட்டி ஃப்ளவர் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக லக்னோ அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தங்களது ட்விட்டரில் அறிவித்துள்ளது. அதே சமயம் தங்களுடைய அடுத்த பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் வீரர் ஜஸ்டின் லேங்கர் நியமிக்கப்படுவதாகவும் லக்னோ தெரிவித்துள்ளது.

கடந்த 1993ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 105 டெஸ்ட் போட்டிகளில் 23 சதங்கள் உட்பட 7696 ரன்களை எடுத்த அவர் 2007 வரையிலான காலகட்டங்களில் ஆஸ்திரேலியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். மேலும் ஓய்வுக்கு பின் வர்ணனையாளராக இருந்த அவர் 2018இல் பந்து சேதப்படுத்தப்பட்ட வழக்கில் ஆஸ்திரேலியா சிக்கி தடுமாறிய போது பயிற்சியாளராக பொறுப்பேற்று மீண்டும் வெற்றிப் பாதையில் நடக்க உதவினார்.

- Advertisement -

அந்த வகையில் சிறப்பாக செயல்பட்ட அவரது தலைமையில் 2021 டி20 உலக கோப்பையை முதல் முறையாக வென்று ஆஸ்திரேலியா சாதனை படைத்தது. இருப்பினும் 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் அவருடைய தலைமையில் ஆஸ்திரேலியா தோல்விகளை சந்தித்தது. ஆனாலும் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற கௌரவமான ஆஷஸ் கோப்பை வென்றது உட்பட ஆஸ்திரேலியாவின் தலைமைப் பயிற்சியாளராக அவர் மிகச் சிறப்பாகவே செயல்பட்டார் என்றே சொல்லலாம்.

Langer

அதனால் தற்போது லக்னோ அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள அவர் ஆலோசகரான முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் துணை பயிற்சியாளரான விஜய் தஹியா, பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்கெல், ஃபீல்டிங் பயிற்சியாளரான ஜாண்டி ரோட்ஸ் ஆகியோருடன் இணைந்து 2024 சீசனில் வழி நடத்த உள்ளார். இது பற்றி லக்னோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளது பின்வருமாறு. “லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் மற்றும் பேட்ஸ்மேன் ஜஸ்டின் லேங்கர் அவர்களை தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கிறது”

- Advertisement -

“மேலும் 2 வருடங்கள் பதவி காலம் முடிந்து விடைபெறும் ஆண்டி ஃபிளவருக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதே சமயம் அன்பான ஆண்டி அவர்களை வழி அனுப்புகிறோம். அவர் எப்போதுமே எங்களுடைய அணியில் ஒருவராக இருப்பார். அனைத்திற்கும் நன்றி” என்று கூறியுள்ளது. மேலும் லக்னோ அணியில் இணைந்தது பற்றி லேங்கர் கூறியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் ஒரு சிறந்த பயணத்தின் அங்கமாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் இருந்து வருகிறது. அந்த பயணத்தில் நாமும் ஒருவராக இருந்து வரும் காலங்களில் அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல உதவுவோம்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs WI : கேப்டனா இருந்து நானே தப்பு பண்ணிட்டேன். இந்திய அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – வெ.இ கேப்டன் வருத்தம்

அந்த வகையில் டெல்லி அணியில் பயிற்சியாளராக இருக்கும் ரிக்கி பாண்டிங்கை தொடர்ந்து மற்றொரு ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் வீரர் ஐபிஎல் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement