வேட்டி சட்டையில் குத்தாட்டம் போட்ட சி.எஸ்.கே வீரர்கள் – கேம்பிற்குள் நடைபெற்று முடிந்த வீரரின் நிச்சயதார்த்தம்

CSK
- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது சென்னை அணிக்கு வெற்றிகரமாக செல்லவில்லை என்றே கூறலாம். ஏனெனில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 6 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள சென்னை அணியானது புள்ளி பட்டியலில் பின்தங்கி உள்ளது. மேலும் இனி வரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு ஒரு வாய்ப்பு உள்ளதால் இனி வரும் போட்டிகளில் சென்னை அணி மிகப் பெரிய சிக்கலுக்கு இடையேதான் விளையாட இருக்கிறது.

ஆனாலும் சி.எஸ்.கே வீரர்களின் ஓய்வறையில் தற்போதும் வீரர்கள் நல்ல மனநிலையுடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது திடீரென சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் வேட்டி சட்டை அணிந்து கொண்டாட்டத்தில் ஈடுபடும் சில புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

அதனை சிஎஸ்கே அணி நிர்வாகமே தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் யாதெனில் : இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக துவக்க வீரராக விளையாட தேர்வாகியுள்ள நியூசிலாந்து வீரர் டேவான் கான்வே தற்போது பயோ பபுள் வளையத்தில் சென்னை அணியுடன் இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் காதலிக்கும் கிம் என்பவருடன் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.

அதற்கு முன்னதாக தற்போது இந்தியா வந்துள்ள கிம் டேவான் கான்வேவை சந்தித்தார். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணத்திற்கு முன்னதாக இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் செய்து வைக்க வேண்டும் என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் ஒரு சிறிய ஏற்பாட்டினை செய்து தமிழ் மரபுப்படி அவர்களுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்து ஒரு பார்ட்டியும் வைத்துள்ளது.

- Advertisement -

அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தான் தற்போது சிஎஸ்கே அணியின் நிர்வாகம் சமூக வலைத் தளத்தின் வாயிலாக வெளியிட்டு உள்ளது. இதன் காரணமாகவே தற்போது சென்னையில் ரசிகர்கள் டேவான் கான்வேவின் திருமண வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : என்னய்யா அம்பயரிங் இது? மீண்டும் சர்ச்சையான தீர்ப்பை வழங்கிய அம்பயர்கள் – என்ன நடந்தது ? (ரசிகர்கள் அதிருப்தி)

ஏற்கனவே கடந்த ஆண்டு தீபக் சாகர் மைதானத்திலேயே தனது காதலிக்கு ப்ரபோஸ் செய்ததை தொடர்ந்து தற்போது நியூசிலாந்து வீரருக்கு சி.எஸ்.கே நிர்வாகமே நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் நாளை இரவு விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement