IPL 2024 : ஒருவேளை தோனி ஆடலானா சி.எஸ்.கே கண்டிப்பா அவரைத்தான் ட்ரேட் செய்யும் – அவரே அடுத்த சி.எஸ்.கே தல

MS Dhoni vs MI
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி குஜராத் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 9-ஆம் இடம் பிடித்து வெளியேறிய சென்னை அணியானது இம்முறை வழக்கம் போல் மிகச் சிறப்பாக கம்பேக் கொடுத்து சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. இந்நிலையில் 41 வயதாகும் தோனிக்கு இது கடைசி சீசன் என்று அனைவராலும் பேசப்பட்டு வந்தது.

ஆனால் ரசிகர்களின் அன்பிற்காகவும், பாசத்திற்காகவும் இன்னும் ஒரு சீசன் விளையாட இருப்பதாக தோனி இந்த தொடரின் முடிவில் அறிவித்தார். அதன் காரணமாக எதிர்வரும் 2024-ஆம் ஆண்டு ஐ பி எல் தொடரில் அவர் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துள்ள தோனி அடுத்த ஐபிஎல் தொடருக்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதினால் அவரது உடற்தகுதியை பொறுத்தே அடுத்த தொடரில் முழுவதுமாக விளையாடுவாரா என்பது தெரியும்.

- Advertisement -

இந்நிலையில் ஒருவேளை தோனி சென்னை அணிக்காக விளையாட முடியாமல் போனால் எந்த வீரர் தோனியின் இடத்தை நிரப்ப போகிறார்கள்? என்பது குறித்த பேச்சு அனைவரது மத்தியிலும் தற்போது எழுந்துள்ளது. இந்நிலையில் அஸ்வினின் நெருங்கிய நண்பரும், பிரபல கிரிக்கெட் விமர்சகருமான பிரசன்னா அகோரம் பேசியுள்ள ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் ஒருவேளை தோனிக்கு பதிலாக ஒரு நல்ல இம்பேக்ட் வீரர் வேண்டும் என்றால் நிச்சயம் சஞ்சு சாம்சனை சென்னை அணி டிரேடிங் செய்ய வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார். இது உறுதியான தகவல் இல்லை என்றாலும் நிச்சயம் இந்த யோசனை அவர்களுக்கு இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

அதேபோன்று ராயுடுவின் இடத்தை நிரப்ப ஒரு டொமஸ்டிக் வீரரும், தோனியின் இடத்தை சஞ்சு சாம்சனும் நிரப்புவார்கள் எனில் நிச்சயம் சிஎஸ்கே அணியால் அடுத்த சீசனிலும் கோப்பையை தக்க வைக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார். அவர் இப்படி பேசியுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் உள்ளது. அதோடு இதனை கண்ட ரசிகர்களும் தோனிக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அந்த இடத்தை நிரப்பினால் நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும். தோனியின் வழியை சஞ்சு சாம்சன் கண்டிப்பாக பின்பற்றுவார் என்ற ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : வீடியோ : ரசிகையாக தல தோனியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய – ருதுராஜ் வருங்கால மனைவி

இருப்பினும் ஒருவேளை நாம் சஞ்சு சாம்சனை டிரேட் செய்தால் அதற்கு ராஜஸ்தான் அணியின் நிர்வாகமும் ஒப்புதல் வழங்கியாக வேண்டும். இரு அணிகளுமே ஒப்புக்கொண்டால் மட்டும் தான் இது சாத்தியம் என்றாலும் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியில் இருந்தால் நன்றாகத் தான் இருக்கும் என ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement