வீடியோ : ரசிகையாக தல தோனியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய – ருதுராஜ் வருங்கால மனைவி

Utkarsha Pawar
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பரபரப்பான போட்டிகளுடன் மகிழ்வித்து வந்த ஐபிஎல் 2023 டி20 தொடர் கோலாகலமாக நிறைவு பெற்றுள்ளது. அதில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்தது. குறிப்பாக வலுவான அணியாக கருதப்படும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத்தை அதன் கோட்டையான அகமதாபாத் மைதானத்தில் மாபெரும் ஃபைனலில் எதிர்கொண்டு மோகித் சர்மா போராட்டத்தைத் தாண்டி கடைசி 2 பந்துகளில் சிக்ஸரையும் பவுண்டரியும் பறக்க விட்ட ஜடேஜா அபாரமான ஃபினிஷிங் கொடுத்து சென்னையை வெற்றி பெற வைத்தது ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.

அந்தப் போட்டியில் அற்புதமான வெற்றியை பெற்றுக் கொடுத்த ரவீந்திர ஜடேஜாவை கடைசியில் தம்முடைய இடுப்பில் தூக்கி வைத்து கட்டிப்பிடித்த தோனி உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விடாத குறையாக பாராட்டியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. மேலும் அந்தப் போட்டியில் அனைவருமே அசத்தலாக செயல்பட்ட நிலையில் தன்னுடைய கடைசி ஐபிஎல் போட்டியில் முக்கிய நேரத்தில் மோஹித் சர்மா வீசிய 13வது ஓவரில் 6, 4, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை விளாசி 19 (8) ரன்கள் குவித்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்ட ராயுடு கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார்.

- Advertisement -

தல தோனியிடம் ஆசிர்வாதம்:
அத்துடன் 6 கோப்பைகளை வென்று ஐபிஎல் ஜாம்பவானாக ஓய்வு பெற்ற அவரது கையாலும் ஜடேஜாவும் கையாலும் வெற்றிக் கோப்பை தோனி வாங்கியது மற்றுமொரு மறக்க முடியாத தருணமாக அமைந்தது. அதை விட எம்எல்ஏவாக இருந்தும் பல ஆயிரம் ரசிகர்களுக்கு முன்னிலையில் சென்னையை வெற்றி பெற வைத்த தம்முடைய கணவர் ஜடேஜாவின் காலில் விழுந்து அவருடைய மனைவி ரவிபா ஆசீர்வாதம் வாங்கியது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே போல சென்னைக்காக விளையாடிய வீரர்களின் குடும்பங்களும் போட்டியின் முடிவில் களத்திற்கு வந்து வெற்றிகளை கொண்டாடினர்.

இந்நிலையில் அந்த கொண்டாட்டத்தின் போது இளம் வீரர் ருதுராஜ் கைக்வாட் திருமணம் செய்து கொள்ளப் போகும் உட்கர்ஷா பவார் கேப்டன் தோனியின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக தம்முடைய ரோல் மாடலாக கருதப்படும் தோனியை அருகில் நேராக பார்த்த மகிழ்ச்சியில் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திய அவர் அடுத்த நொடியே காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டார்.

- Advertisement -

அப்போது “நன்றாக இரு. ஆனால் ஏம்மா என் காலில் விழுகிறாய். உன்னுடைய வருங்கால கணவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள்” என்ற வகையில் தோனி கலகலப்பாக வாழ்த்தியது அருகில் இருந்த ருத்ராஜை வெட்கப்பட வைத்து பின்னோக்கி நடக்க வைத்தது. இந்தியாவுக்கு 3 விதமான உலக கோப்பைகளை வென்று மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் கருதப்படும் தோனிக்கு இந்த தலைமுறையில் இருக்கும் பெரும்பாலானவர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர்.

அந்த வகையில் மகாராஷ்டிரா மகளிர் அணிக்காக விளையாடும் அவர் தோனியின் ரசிகையாக இருக்கிறார் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மேலும் மகாராஷ்டிரா ஆடவர் அணியின் கேப்டனாக விளையாடும் ருதுராஜை காதலித்த அவர் தற்போது தமது பெற்றோரின் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். தங்களுடைய காதல் கதையும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்ற செய்தியையும் அவர்கள் கடந்த வரம் தான் வெளியிட்டிருந்தார்கள்.

இதையும் படிங்க:WTC Final : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு? – எந்த சேனலில் பார்க்கலாம்?

அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடும் இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இடம் பிடித்திருந்த ருதுராஜ் திருமணத்திற்காக விலகியுள்ளதால் யசஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து ருதுராஜ் – உட்கர்ஷா ஜோடியின் திருமணம் இன்னும் ஓரிரு நாட்களில் மகாராஷ்டிராவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement