மும்பையை தொடர்ந்து சென்னையும் பெட்டி படுக்கையை பேக் பண்ண வேண்டியதுதான் – பிளே ஆஃப் சுற்று நிலை என்ன?

CSKvsMI
- Advertisement -

மும்பை நகரில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் மே 4-ஆம் தேதி நடைபெற்ற 49-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. புனேவில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூருவுக்கு விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் ஆகியோர் 62 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஆனால் அடுத்த ஒருசில ஓவர்களில் டுப்லஸ்ஸிஸ் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 38 (22) ரன்களில் அவுட்டாகி செல்ல அடுத்து வந்த கிளன் மேக்ஸ்வெல் 3 (3) ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் தடுமாறிக் கொண்டிருந்த விராட் கோலியும் 30 (33) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

Mahipal Lomror

- Advertisement -

அதனால் 79/3 என திடீரென சரிந்த பெங்களூருவை நடுவரிசையில் இளம் வீரர்கள் மஹிபால் லோம்ரோர் 42 (27) ரன்களும் ரஜத் படிடார் 21 (15) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினர். கடைசி நேரத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 26* (17) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவர்களில் பெங்களூரு 173/8 ரன்கள் எடுக்க சென்னை சார்பில் பந்துவீச்சில் கலக்கிய மகேஷ் தீக்சனா 3 மொய்ன் அலி 2 விக்கெட்களையும் எடுத்தனர்.

கலக்கிய பெங்களூரு:
அதை தொடர்ந்து 174 என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னைக்கு கடந்த போட்டியில் 182 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே இம்முறை 54 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். அப்போது 28 (23) ரன்களுடன் ருத்ராஜ் அவுட்டானதும் அடுத்து வந்த ராபின் உத்தப்பா 1 (3) ரன்களிலும் அம்பத்தி ராயுடு 10 (8) ரன்களிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்ததால் 75/3 என சென்னையும் ஆரம்பத்திலேயே தடுமாறியது.

Hasaranga Moin Ali

இருப்பினும் மறுபுறம் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 56 (37) ரன்கள் எடுத்து வெற்றிக்காக போராடிய கான்வேயும் அவுட்டாகி சென்ற வேளையில் அதிரடியாக விளையாடிய மொய்ன் அலியுடன் இணைந்து காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா 3 (5) ரன்னில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். அவருக்கு பின்னாடியே மொயீன் அலியும் 34 (27) அவுட்டானதால் மேலும் பின்னடைவை சந்தித்த சென்னைக்கு இறுதியில் தோனியும் அவுட்டாகி சென்றதால் தோல்வி உறுதியானது. இறுதியில் 20 ஓவர்களில் 160/8 ரன்களை மட்டுமே எடுத்த சென்னை 13 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. பெங்களூர் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளை எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

முதலாவதாக மும்பை:
இந்த சிறப்பான வெற்றியால் பங்கேற்ற 11 போட்டிகளில் 6-வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு புள்ளி பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் உறுதியாக உள்ளது. மறுபுறம் பந்துவீச்சில் அசத்தினாலும் பேட்டிங்கில் கடைசி நேரத்தில் கோட்டைவிட்ட சென்னை பங்கேற்ற 10 போட்டிகளில் 7-வது தோல்வியை பதிவு செய்து தொடர்ந்து புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் நீடிக்கிறது. முன்னதாக இந்த போட்டியில் சென்னை தோல்வியடைந்ததால் அது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

cskvsmi

அதாவது ஏற்கனவே பங்கேற்ற 9 போட்டிகளில் 8 தோல்விகளையும் வெறும் 1 வெற்றியை மட்டுமே பதிவு செய்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடுவது அனைவரும் அறிவோம். அந்த நிலைமையில் நேற்று சென்னை தோல்வி அடைந்ததால் ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுடன் மும்பை இந்தியன்ஸ் அதிகாரபூர்வமாக முதல் அணியாக வெளியேறியுள்ளது. 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என மாபெரும் சாதனை படைத்த மும்பைக்கு இப்படி ஒரு பரிதாப நிலைமை ஏற்பட்டுள்ளது அந்த அணி ரசிகர்களை மேலும் சோகமடைய வைத்துள்ளது.

- Advertisement -

பின்னாலே சென்னை:
பரம எதிரியான மும்பை முதல் அணியாக வெளியேறி விட்டது என்று சென்னை ரசிகர்களாலும் கொண்டாட முடியவில்லை. ஏனெனில் எஞ்சியிருக்கும் 4 போட்டிகளில் வென்றாலும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது என்ற நிலைமையில் அடுத்த போட்டியில் தோல்வி அடைந்தாலோ அல்லது குஜராத் உட்பட இதர அணிகள் வெற்றி பெற்றாலோ சென்னை 2-வது அணியாக அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதற்கு 100% வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வீடியோ : தோனி ஆட்டமிழந்து வெளியேறிய போது கெட்ட வார்த்தையில் திட்டி வழியனுப்பிய கோலி – ரசிகர்கள் அதிருப்தி

சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் மும்பையை முதலாவதாக வீட்டிற்கு அனுப்பி வைத்த சென்னை “நீ முன்னாலே போனால் நான் பின்னாலே வாரேன்” என்பதுபோல் 2-வது அணியாக விமான நிலையத்திற்கு செல்வதற்கு பெட்டி படுக்கைகளை கட்டிக்கொண்டு தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த 2 அணிகளை தவிர இதர 8 அணிகளுக்கு எஞ்சிய போட்டிகளில் வென்றால் பிளே-ஆப் சுற்றுக்கு செல்லலாம் என்ற நல்ல நிலைமை உள்ளது.

Advertisement