தோனியோட ஸ்டைலே வேறரகம் தாங்க.. யாரும் எதிர்பாராத வீரரை அணியில் இணைத்த – மாஸ்டர் பிளான்

CSK
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது துபாயில் நவம்பர் 19-ஆம் தேதி நேற்று கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி ஏலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு தங்களுக்கு தேவையான வீரர்களை சரியான தொகையில் ஏலத்தில் எடுத்தது அனைவரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு சென்னை அணியில் இருந்த ஒரு மிகப்பெரிய குறையையும் மிக நேர்த்தியாக கையாண்ட நிர்வாகிகள் அதற்கேற்றார் போன்ற ஒரு வெளிநாட்டு வீரரை அணியில் சேர்த்து அசத்தி உள்ளனர். அந்த வகையில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் வெளிநாட்டு வீரராக மதீஷா பதிரானா மட்டுமே வெளிநாட்டை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளராக இருந்தார்.

- Advertisement -

அதுவும் அவர் அடிக்கடி காயமடையக்கூடிய வீரர் என்பதனால் அவருக்கு மாற்றாக ஒரு வீரர் நிச்சயம் அணியில் வேண்டும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்று முடிந்த இந்த ஐபிஎல் ஏலத்தில் அனைத்து அணிகளும் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களாக குறிப்பாக ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த வீரர்களை எடுக்கவே ஏலத்தில் ஆர்வம் காட்டியது.

ஆனால் சென்னை அணிமட்டும் வேகப்பந்து வீச்சாளர்களை எடுக்கும்போது கவனமாக ஏலத்தை கையாண்டது. குறிப்பாக தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்டு கோட்சேவை இடத்தில் எடுக்க சிஎஸ்கே அணி முயன்றாலும் தொகை அதிகமானதால் அவரை தவறவிட்டது. இருப்பினும் கடைசி கட்டத்தில் வங்கதேச அணியை சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளரான முஸ்தஃபிசூர் ரகுமானை 2 கோடி ரூபாய் என்கிற அடிப்படை விலைக்கு தட்டி தூக்கியது.

- Advertisement -

தற்போது 28 வயதாகும் முஸ்தபிசுர் ரஹ்மான் மிக இளம் வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டுக்காக அறிமுகமாகி பல ஆண்டுகள் விளையாடிய அனுபவத்துடன் இருக்கிறார். ஆரம்ப கட்டத்தில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் ஆண்டுகள் செல்ல செல்ல தற்போது சுமாராகவே செயல்பட்டு வருகிறார். இருப்பினும் அவர் தோனியின் கீழ் விளையாடும் போது நிச்சயம் அவருடைய திறன் முழுவதும் வெளிப்படும் என்பதனால் நிச்சயம் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் அவர் அசத்துவார் என்று ரசிகர்கள் இப்போது தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் ஏலத்தில் முக்கிய முடிவுகளை எடுத்த இந்த நபர் யார் தெரியுமா? – அவரது பேச்சை சி.எஸ்.கே கேட்க காரணம் என்ன தெரியுமா?

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் கொஞ்சம் பார்ம் அவுட்டாகும் வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து அவர்களை மிளிர வைப்பதே தோனியின் ஸ்டைல் என்றும் அதன் காரணமாகவே அவர் இந்த திட்டத்தை தீட்டி இருப்பார் இது நிச்சயம் தோனியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் தான் என்று ரசிகர்கள் இந்த தேர்வை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement