ஐ.பி.எல் ஏலத்தில் முக்கிய முடிவுகளை எடுத்த இந்த நபர் யார் தெரியுமா? – அவரது பேச்சை சி.எஸ்.கே கேட்க காரணம் என்ன தெரியுமா?

Sundar-Raman
- Advertisement -

துபாயில் நேற்று டிசம்பர் 19-ஆம் தேதி நடைபெற்ற 17-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சிறப்பாக வீரர்களை தேர்வு செய்துள்ளது சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி நேற்று துபாய் கோகோ கோலா வளாகத்தில் மினி ஏலமானது விறுவிறுப்பாக நடைபெற்று முடித்தது. இந்த மினி ஏலத்தில் பத்து அணிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

சென்னை அணி ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ் மற்றும் ராயுடு போன்ற வீரர்களுக்கான மாற்று வீரர்களை தேர்வு செய்ய இருந்ததால் இந்த ஏலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வேளையில் நியூசிலாந்து அணியின் வீரர்களான டேரல் மிட்சல், ரச்சின் ரவீந்திரா இந்திய வீரர்களான ஷர்துல் தாகூர் போன்ற வீரர்களை சென்னை அணி ஏலத்தில் எடுத்து அசத்தியது.

- Advertisement -

அதோடு வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான், சமீர் ரிஸ்வி, அவினாஷ் ராவ் போன்ற வீரர்களையும் ஏலத்தில் எடுத்தது சென்னை அணியின் முக்கிய முடிவுகளாக மாறியது. இந்த ஏலத்திற்கு முன்னதாக 31 கோடி ரூபாய் கையிருப்பில் ஏலத்திற்கு சென்ற சென்னை அணி 30 கோடி ரூபாய் செலவு செய்து அசத்தலான வீரர்களை தேர்வு செய்தது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த ஏலத்தின் போது சிஎஸ்கே அணி சார்பாக காசி விஸ்வநாதன், ஸ்டீபன் பிளம்மிங், அனிகித் பல்தி போன்ற நிர்வாகிகளுக்கு மத்தியில் சுந்தர் ராமன் என்கிற ஒரு நபர்தான் ஏலத்தில் முக்கிய முடிவுகளை எடுத்ததை கவனிக்க முடிந்தது. அவர் குறித்த விவரத்தை தான் இந்த பதிவில் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

- Advertisement -

அதன்படி முன்னாள் ஐ.பி.எல் சி.ஓ.ஓ ஆன அவர் 2020-ஆம் ஆண்டு சென்னை அணி லீக் சுற்றோடு வெளியேறிய போது சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனால் சிஎஸ்கே அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டவர். ஏற்கனவே ஐபிஎல் நிர்வாகத்தில் பணிபுரிந்த அவருக்கு எந்த வீரர்களை தேர்வு செய்வது? திட்டங்களை எவ்வாறு வகுப்பது? போன்ற அணுகுமுறையினை மிக தெளிவாக தெரிந்தவர். இதன் காரணமாகவே சிஎஸ்கே அணி அவரை ஆலோசகராக நியமித்தது.

இதையும் படிங்க : ட்ரேடிங் முறையில் சிஎஸ்கே அணியில் ரோஹித் சர்மாவா? சலசலப்புகளுக்கு காசி விஸ்வாசனாதன் பதில்

அவரது வருகைக்கு பின்னர் சென்னை அணி மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியது. இதற்கு காரணம் அவரது திட்டங்களும், வீரர்கள் தேர்வு முறையும்தான். தோனிக்கும் அவருக்கும் நெருங்கிய நட்பு இருப்பதாலும், சிஎஸ்கே அணியின் மூளையாகவும் சுந்தர் ராமன் செயல்பட்டு வருவதாக பலரும் அவரை பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement